Don't Miss!
- News
தோண்ட தோண்ட சடலம்.. மணிப்பூர் மண்சரிவில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு.. 50 பேர் கதி என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரலாம்...
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Finance
இனி உங்க இஷ்டத்துக்கு வீடியோ போட முடியாது.. சமூக வலைத்தள வீடியோவுக்கு கடிவாளம்!
- Automobiles
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு
- Technology
இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தூசித் தட்டப்படும் தேவர் மகன் 2 படம்.. கமலுக்கு மகனாக யார் நடிக்கறாங்க தெரியுமா?
சென்னை : நடிகர் கமல்ஹாசன், சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி, நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான படம் தேவர் மகன்.
கடந்த 1992ல் இந்தப் படம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்தின் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
மலையாள இயக்குநர் பரதன் இந்தப் படத்தை இயக்கிய நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
கன்னட
திரையுலகில்
இருந்து
இன்னொரு
பான்
இந்தியா
படம்..
விக்ராந்த்
ரோணா
டிரைலர்
எப்படி
இருக்கு?

தேவர் மகன் படம்
நடிகர் கமல்ஹாசன், சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி, தலைவாசல் விஜய், நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 1992ல் வெளியான படம் தேவர் மகன். மலையாள இயக்குநர் பரதன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சிவாஜியின் மகுடத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்த படங்களில் இந்தப் படத்திற்கு முக்கியமான இடம் உண்டு.

சிவாஜி, கமலின் எவர்கிரீன் படம்
சிவாஜிக்கு மட்டுமில்லாமல் கமலுக்கும் இந்தப் படம் எவர்கிரீன் வெற்றிப்படமாக அமைந்தது. கௌதமி, ரேவதி என அனைவரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்திருந்தனர். மிகச்சிறப்பான வெற்றியை இந்தப் படம் கொடுத்தது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளான கமலின் படங்களில் இந்தப் படத்திற்கு சிறப்பான இடம் உண்டு.

சிவாஜியின் இயல்பான நடிப்பு
படித்த இளைஞனான கமலின் வாழ்க்கையில் ஜாதி உள்ளிட்டவை ஏற்படுத்தும் மாற்றங்கள், அதையடுத்து அவர் எடுக்கும் முடிவு, அந்த முடிவால் ஏற்படும் விளைவுகளை இந்தப் படம் காட்சிப்படுத்தியிருந்தது. படத்தில் சிவாஜி தன்னுடைய இயல்பான நடிப்பால் அந்தக் கேரக்டரை சிறப்பாக்கியிருந்தார். அவருக்கு அடங்கிய பிள்ளையாய் காதலையும் விட முடியாயமல் தவிக்கும் கேரக்டர் கமலுக்கு.

தேவர் மகன் 2வது பாகம்?
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட உள்ளதாக கடந்த ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது கமலின் விக்ரம் படம் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ள நிலையில், தற்போது இந்தப் படம் மீண்டும் தூசித்தட்டப்பட்டுள்ளது.

கமலின் மகனாக விஜய் சேதுபதி?
விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கமலின் மகனாக விஜய் சேதுபதி மற்றும் வில்லனான நாசரின் மகனாக பகத் பாசில் நடிக்கவுள்ளதாகவும் இவர்கள் இருவருக்கு இடையிலான பிரச்சினைகளும் கதைக்களமாக கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

உடலை குறைக்க அறிவுறுத்தல்
இதனிடையே கமலின் மகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதால் அவர் கண்டிப்பாக தன்னுடைய உடலை குறைக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. அவர் சமீபத்தில் விக்ரம் படத்தில் அவர் மேலாடை இல்லாமல் நடித்திருந்தார். மிகவும் குண்டான உடல்வாகுடன் அவர் சமீப காலங்களில் காணப்படுவது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்வலைகளை ஏற்படுத்திய படம்
தேவர் மகன் படம் கடந்த 1992ல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய படம். சிவாஜி மற்றும் கமலின் இணையான நடிப்பில் வெளியான இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஆண்டிலேயே இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.