twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் பேச்சால் ரஜினி மீது இருந்த சந்தேகம் கன்ஃபர்ம் ஆகிடுச்சு

    By Siva
    |

    சென்னை: மக்களுக்கு ரஜினியின் அரசியல் மீது சந்தேகம் உள்ள நிலையில் அது குறித்து கமல் ஹார்வர்டில் பேசியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

    பல ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தார் ரஜினிகாந்த். தனிக் கட்சி துவங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் அரசியலுக்கு வந்துள்ளதற்கு பின்னால் காவி இருப்பதாக மக்கள் கூறி வருகிறார்கள்.

    இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களும் நடந்து வருகிறது.

    ஹார்வர்டு

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய உலக நாயகன் கமல் ஹாஸனோ, ரஜினியின் அரசியலில் லைட்டாக காவி உள்ளது. அதனால் அவருடன் கூட்டணி சேர்வது கடினம். நாங்கள் நண்பர்கள் தான், ஆனால் அரசியல் வேறு என்று தெரிவித்துள்ளார்.

    ஊர்ஜிதம்

    ஊர்ஜிதம்

    ரஜினிக்கு பின்னால் காவிகளின் முழு ஆதரவு உள்ளது என்று கூறியவர்களின் பேச்சை நம்பாமல் இருந்தவர்கள் கூட தற்போது கமல் பேசியதை கேட்டு அதை நம்புகிறார்கள்.

    பின்வாசல்

    பின்வாசல்

    காவியால் தமிழகத்தில் முன்வாசல் வழியாக வந்து ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அதனால் தான் ரஜினி மூலம் பின்வாசல் வழியாக வர முயற்சி செய்கிறது என்று சமூக வலைதளங்களில் பேசப்படும் நிலையில் கமல் ஹார்வர்டில் இப்படி தெரிவித்துள்ளார்.

    ரஜினியா?

    ரஜினியா?

    என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு தமிழக மக்களுக்கு பிடிக்காத காவியுடன் ஏன் சேர்ந்தீர்கள் ரஜினி என்று மக்கள் கேட்கத் துவங்கிவிட்டனர்.

    காலம்

    காலம்

    கமல் பேசியதற்கு விளக்கம் கேட்டால் தயவு செய்து நேரடியாக பதில் சொல்லுங்கள் ரஜினி சார். காலம், கடவுள் என்று வழக்கம் போன்று எதையாவது சொல்லி எஸ்கேப் ஆகிவிடாதீர்கள் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Kamal Haasan has said that there is a hue of saffron in Rajini's politics. TN people doubted Rajini's intention when he announced his political entry. They doubted that saffron is behind Rajini's political entry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X