வேகமெடுக்கும் இந்தியன் 2... காத்திருக்கும் H வினோத்... டைம் கொடுத்த தனுஷ்... களம் மாறும் காட்சிகள்

சென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தென் ஆப்பிரிக்காவில் நடத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.

இதனிடையே கமலின் கால்ஷீட்டுக்காக ஹெச் வினோத் காத்திருக்க, அவருக்கு தனுஷ் டைம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 மீண்டும் தொடங்கிய இந்தியன் 2

மீண்டும் தொடங்கிய இந்தியன் 2

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2-வில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் இரண்டாம் பாகம் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிரேன் விபத்து, பட்ஜெட் பிரச்சினைகளால் சில மாதங்களாக முடங்கி கிடந்த இந்தியன் 2, விக்ரம் படம் கொடுத்த இண்டஸ்ட்ரி ஹிட்டால் மீண்டும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் பங்கேற்ற சில புகைப்படங்கள் வைரலானது.

 தென்னாப்பிரிக்காவில் அடுத்த ஷெட்யூல்

தென்னாப்பிரிக்காவில் அடுத்த ஷெட்யூல்

இந்தியன் 2 இயக்குநர் இன்னொரு பக்கம் ராம்சரண், கியாரா அத்வானி நடிக்கும் RC 15 படத்தையும் இயக்கி வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூதான் ஆர்சி 15 படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த வாரம் இந்தப் படத்தின் ஹீரோயின் கியாரா அத்வானிக்கு திருமணம் என்பதால், ராம்சரண் படத்துக்கு பிரேக் விட்டுள்ளாராம் ஷங்கர். இந்த கேப்பில் இந்தியன் 2-வை முழுவதுமாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது.

 காத்திருக்கும் ஹெச் வினோத்

காத்திருக்கும் ஹெச் வினோத்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹெலிஹாப்டர் முன் கமல் நிற்கும் போட்டோ வெளியாகி ட்ரெண்டானது. இது இந்தியன் 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது என தகவல் வெளியானது. இந்தியன் 2 சூட்டிங்கை விரைவில் முடித்துவிட்டு உடனடியாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் கமல். முடிந்தால் அதற்கு முன்னதாகவும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தக் கூட்டணியில் படம் உருவாவது சந்தேகம் என சொல்லப்பட்டாலும், ஹெச் வினோத் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

 டைம் கொடுத்த தனுஷ்

டைம் கொடுத்த தனுஷ்

ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவில்லை என சொல்லப்பட்ட அதேநேரம், அவர் தனுஷுக்கு ஒரு கதை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனால் ஹெச் வினோத் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் கமல் படத்தை ஹெச் வினோத் இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் கமலின் முடிவு வரும் வரை ஹெச் வினோத்துக்கு டைம் கொடுத்துள்ளாராம் தனுஷ். ஹெச் வினோத்தும் கமலுக்காக கதையுடன் காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X