»   »  விஸ்வரூபம் 2: மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை... கமலின் அப்டேட்ஸ் இது!

விஸ்வரூபம் 2: மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை... கமலின் அப்டேட்ஸ் இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமெடுத்துள்ளன. படத்தின் இப்போதைய நிலை குறித்து கமல் ஹாஸனே தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

கமலஹாசன் இயக்கி நடித்து 2013-ஆம் ஆண்டு வெளியான படம் விஸ்வரூபம்'. இரு பாகங்களாக உருவாகி வந்த இப்படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


Kamal's new updates on Viswaroopam 2

தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் தயாராகி வந்தது. ஆனால் பட்ஜெட் விவகாரம், பண விவகாரம் இரண்டும் சேர்ந்து விஸ்வரூபம்' படத்தின் இரண்டாவது பாகத்தை கிடப்பில் போட வைத்தது.


அதற்குள் கமல் நடித்த உத்தம வில்லன்', பாபநாசம்', தூங்காவனம்' படங்கள் வெளியாகிவிட்டன.


இந்நிலையில், விஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல், விரைவில் விஸ்வரூபம் 2 என அறிவித்திருந்தார்.


இப்போது படம் குறித்து புதிய தகவல் ஒன்றை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில், "விஸ்வரூபம்-2' படத்தின் பாடல் காட்சிகள் தயாராகியுள்ளது. ரசிகர்களின் மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசையைக் கொடுத்த ஜிப்ரானுக்கும், பாடகர்களுக்கும் நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.


விஸ்வரூபம்-2 படத்தின் தமிழ் பதிப்பிற்கான பாடலை கமலே எழுதியிருக்கிறார்.


"இந்தி பதிப்பிற்கு பிரசூன் ஜோஷி எழுதியிருக்கிறார். தெலுங்கு பதிப்பு தயாராகி வருகிறது," என்பதையும் கமல் தெரிவித்துள்ளார்.

English summary
In a tweet Kamal Hassan updated the status of his long awaited Viswaroopam 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil