விக்ரமில் கமலுக்கு ஜோடி யார்....ஆர்வத்தில் ரசிகர்கள்
சென்னை : கமல் தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழில் மட்டுமல்ல பான் இந்தியன் படமாகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது.
கமல் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கும் படம் என்பதாலும், ஃபகத்பாசில், விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் படம் என்பதாலும் விக்ரம் படம் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது. இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

வில்லன்களின் ஜோடி
இந்த படத்தில் மெயின் வில்லனான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி, பிக்பாஸ் ஷிவானி நாராயணன் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றொரு வில்லனான ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறாராம்.

கமலுக்கு ஜோடி இல்லையா
இதனால் ஹீரோவான கமலுக்கு ஜோடி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். இதுவரை வெளியான தகவல்களின்படி, விக்ரம் படத்தில் வயதான போலீஸ் கேரக்டரில் தான் கமல் நடிக்கிறாராம். கதைப்படி அவருக்கு ஜோடி கிடையாது. தனி ஆளாக தான் நடிக்கிறார் என கூறப்பட்டது.

கமலின் மனைவி யார்
ஆனால் தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, கமலுக்கு ஜோடியாக முன்னணி ஹீரோயின் ஒருவர் நடிக்கிறாராம். அது மட்டுமல்ல கமலின் மனைவியாக வரும் கேரக்டர் தான் கதையின் மிக முக்கியமாக கேரக்டராம். அவருடன் தொடர்புடையதாகவே கதையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் இருக்குமாம்.

ரகசியம் காக்கும் படக்குழு
மிக முக்கியமான ரோல் என்பதால் கமலின் ஜோடி கேரக்டர் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம். படத்தின் ரிலீஸ் சமயத்திலேயே கமலின் ஜோடி யார் என்பது தெரிய வருமாம். விக்ரம் படத்தை 2022 ம் ஆண்டு கோடை விடுமுறையின் போது வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.

விரைவில் அடுத்தகட்ட ஷுட்டிங்
முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியிலும் நடத்தப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள போலீஸ் மியூசியத்தில் செட் அமைத்து நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் சென்னை போலீஸ் அனுமதி மறுத்ததால் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கு படக்குழு லொகேஷன் தேடி வருகிறது.


Click it and Unblock the Notifications











