விக்ரம் ஆடியோ வெளியீடு...பான் வேர்ல்டு பிளான் போடும் ஆண்டவர்..ஃபர்ஸ்ட் சிங்கிள் என்னன்னு தெரியுமா?

சென்னை : விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீடு பற்றி உலக தரத்திற்கு பிளான் போட்டு வைத்துள்ளாராம் உலகநாயகன். ஆண்டவரின் இந்த பிளான் அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் விக்ரம் ஜுன் 3 ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாக உள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாததால், தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப் பெரிய நம்பிக்கையாக இருப்பது கமலின் விக்ரம் படம் தான்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்கள்

ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்கள்

கமலின் விக்ரம், விக்ரமின் கோப்ரா, சூர்யாவின் வாடிவாசல், சூர்யா 41 ஆகிய படங்கள் தான் தமிழ் சினிமாவின் மானத்தை ஓரளவிற்காவது காப்பாற்றும் என ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் ரசிகர்களின் ஆர்வத்தை பெரிய அளவில் தூண்டி உள்ள படம் விக்ரம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

செம ப்ரொமோஷன்

செம ப்ரொமோஷன்

விக்ரம் படத்திற்கு மிகப் பெரிய ப்ரொமோஷன் செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை, நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்லும் முக்கிய ரயில்களில் வரைந்துள்ளனர். விக்ரம் படம் பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் இந்த போஸ்டர்களை வடிவமைத்து, வரையப்பட்டுள்ளன.

பான் வேர்ல்டு பிளானா இருக்கே

பான் வேர்ல்டு பிளானா இருக்கே

இதே போல் விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். மேல் முதல் வாரத்தில், இசையமைப்பாளர் அனிருத், படத்தில் பணியாற்றிய முக்கிய நடிகர், நடிகைகள், படக்குழுவினர் பங்கேற்க இந்த விழா நடத்தப்பட உள்ளதாம். விரைவில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளதாம்.

அப்போ செம ட்ரீட் தான்

அப்போ செம ட்ரீட் தான்

அதற்கு முன்பாக மே முதல் தேதியன்று விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிடவும் பிளான் செய்திருக்கிறார்களாம். இந்த பாடல், அபூர்வ சகோதரர்கள் படத்தில் செம ஹிட் பாடலான, அண்ணாத்த ஆடுறார் பாடலை போல் செம குத்தாட்டம் போட வைக்கும் பாடலாக இருக்குமாம். கமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள படத்தில் இப்படி ஒரு பாடல் உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்கு எகிற வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X