»   »  பாபநாசம் சுயம்புலிங்கத்தின் குடும்பத்தை பாருங்களேன்!

பாபநாசம் சுயம்புலிங்கத்தின் குடும்பத்தை பாருங்களேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படம் தற்போது தமிழில் கமல், கௌதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடிக்க 'பாபநாசம்' எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. கமல் நடிக்கும் படம் என்பதாலும், நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவருக்கு ஜோடியாக கவுதமி நடிக்கிறார் என்பதாலும் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இளமையான கமல்

இளமையான கமல்

கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதைக்களம் 'பாபநாசம்'. வேஷ்டி கட்டிய இளமையான கமலை இதில் பார்க்கலாம் என்கின்றனர்.

கவுதமி கமல்ஹாசன்

கவுதமி கமல்ஹாசன்

தேவர்மகனில் கமல் கவுதமி ஜோடி பட்டையை கிளப்பியிருப்பார்கள். இதில் டீன் ஏஜ் பெண் குழந்தைகளின் பெற்றோர்களாக நடித்திருக்கின்றனர் இருவரும். நிஜத்தில் இருவருக்குமே டீன் ஏஜ் பிள்ளைகள் இருக்கின்றனர்.

கமலின் பெயர்!

கமலின் பெயர்!

'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ஜார்ஜ் குட்டி. ‘பாபநாசம்' படத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு சுயம்புலிங்கம் என்கின்றனர்.

மோகன்லால் மகன்

மோகன்லால் மகன்

இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் ப்ரணவ் அறிமுகமாகிறதார். இவரது பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஸ்பயணம்

பஸ்பயணம்

சாதாரண நடுத்தரவர்க்கத்து குடும்பத்தினராக வாழ்ந்துள்ளாராம் கமல், பஸ் பயணம், குடும்ப சிக்கல்கள், பெண் குழந்தைகளுடனான புரிதல் என பாபநாசத்தில் அசலாக வாழ்ந்திருக்கிறாராம்.

கவுதமியும் மகள்களும்

கவுதமியும் மகள்களும்

மகளின் பிரச்சினைகளுக்கு என்ன மருந்து போடுவது என்று அவர் தவிக்கும் தவிப்பிற்கு இந்த படமே சாட்சி.

கலாபவன் மணி

கலாபவன் மணி

இந்தப் படத்தில் இளவரசு, கலாபவன் மணி ஆகியோர் போலீசாக நடித்திருக்கின்றனர்.

மூக்கில் குத்திய போலீஸ்

மூக்கில் குத்திய போலீஸ்

போலீசார் தாக்கியதில் மூக்கில் ரத்தம் உறைந்து கட்டியாக இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது கமலின் மூக்கில் கலாபவன் மணி ஓங்கிக் குத்தினார். ஆனால் சற்று பலமாக குத்தி விட்டார்.

அசராத கமல்

அசராத கமல்

அப்போது கமல்ஹாசனின் மூக்குக்குள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த ரப்பர் உள்ளே போய் விட்டது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திணறிவிட்டாராம். ஆனாலும் சிகிச்சைக்குப் பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு நடிக்க வந்துவிட்டாராம் கமல்.

நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸ்

பாபநாசத்தில் போலீஸ் ஐ.ஜியாக ஆஷா சரத்தும், கமலின் மூத்த மகளாக ஜில்லாவில் நடித்த நிவேதா தாமஸும், இளைய மகளாக த்ரிஷ்யம் படத்தில் நடித்த எஸ்தரும் நடிக்கிறார்கள். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் இயக்குகிறார். படம் விரைவில் வெளியாக உள்ளது என்கின்றனர்.

மூன்று படங்கள்

மூன்று படங்கள்

விஸ்வரூபம் படத்திற்கு பின்னர் பாபநாசம், உத்தமவில்லன், விஸ்வரூபம் 2 படங்களில் நடித்து வருகிறார் கமல். 2015ஆம் ஆண்டில் எந்த படம் முதலில் வரப்போகிறதோ?

English summary
Tamil remake of Drishyam is titled Papanasam. Directed by Jeethu Joseph. Kamal Haasan, Gowthami, Niveda Thomas and Kalabhavan Mani in Lead Role.
Please Wait while comments are loading...