For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எனக்கும் மரியாதை இல்லாமல் பேசினால் பிடிக்காது… பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு… யாரைச் சொல்கிறார் கமல்?

  |

  சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

  சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம்போல பிக் பாஸ் வீட்டுக்கு என்ட்ரி கொடுத்தார் கமல்.

  அப்போது, அசல் கோளாறுக்கும் ஆயிஷாவுக்கும் இடையே பஞ்சாயத்து செய்ய போன கமல், ஒருகட்டத்தில் மரியாதை குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

  பிக் பாஸ்: குயின்ஸியிடம் அத்துமீறிய அசல் கோளார்.. நிவாஷினியிடம் நீச்சல் குளத்தில் வேறலெவல் கடலை! பிக் பாஸ்: குயின்ஸியிடம் அத்துமீறிய அசல் கோளார்.. நிவாஷினியிடம் நீச்சல் குளத்தில் வேறலெவல் கடலை!

  அசல் கோளாறு – ஆயிஷா தகராறு

  அசல் கோளாறு – ஆயிஷா தகராறு

  பிக் பாஸ் சீசன் 6ல் 'ஜோர்த்தாலே' பாடல் மூலம் பிரபலமான அசல் கோளாறு பங்கேற்றுள்ளார். முதல் நாளில் இருந்தே சைலண்ட்டாக சேட்டைகள் செய்து வரும் அசல் கோளாறு, அவ்வப்போது சக போட்டியாளர்களிடமும், முக்கியமான பெண்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்கிறார். அவருக்கும் குயின்ஸிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதனிடையே முதல் நாளிலேயே ஆயிஷாவை அழ வைத்து வேடிக்கைப் பார்த்தார் அசல். ஆயிஷாவுடன் நட்பாக பழக ஆசை எனக் கூறிய அசல், வாடா போடான்னு மட்டும் கூப்பிடக் கூடாது என கண்டிஷன் போட்டார். உரிமையோடு பேசியது இப்படி ஆயிட்டேன் ஆயிஷாவும் பொளபொளவென கண்ணீர் விட்டு அழுது, சிம்பதி கிரியேட் செய்தார்.

  கமலிடம் வந்த பஞ்சாயத்து

  கமலிடம் வந்த பஞ்சாயத்து

  இந்நிலையில், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் அகம் டிவி வழியாக பேசினார் கமல். அப்போது முதல் நாளில் நண்பர்களை தேர்வு செய்தவர்கள், இப்போது எப்படி பழகிருக்கீங்க என ஒவ்வொருவரிடமும் வரிசையாகக் கேட்டு வந்தார். அப்போது, என்னால் அசலிடம் நட்பாக பழக முடியவில்லை. வாடா போடா என பேசக் கூடாது என்ற அவரது கண்டிஷன் எனக்கு செட்டாகவில்லை என ஆயிஷா வெளிப்படையாகக் கூறினார். உடனே இதுபற்றி அசலிடம் என்ன விசயம் என்பதாக, கமல் கேள்வி எழுப்பினார். அசலும் அப்போது சில நேரங்களில் அப்படி வாடா போடா என கூப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை என வெளிப்படையாகக் கூறினார்.

  இதுதான் தீர்ப்பு

  இதுதான் தீர்ப்பு

  இந்த வாடா... போடா... விவகாரத்தில் அசல் கோளாறுக்கும் ஆயிஷாவிற்கும் இடையில் ஏற்பட்ட பஞ்சாயத்தையொட்டி கமலும் பேசினார். அப்போது, "மரியாதை நமக்கு வேணுமின்னா கேட்டு வாங்கிக்கணும். அதுல தப்பே இல்லை. அது உரிமையும் கூட. 'டேய்'ன்னு என்னைக் கூப்பிட்டா பிடிக்காது. இதை ஒவ்வொருத்தர்கிட்டயும் போய் சொல்ல முடியுமா... ஸோ... எல்லோரையும் 'வாங்க... போங்க'ன்னு கூப்பிட ஆரம்பித்தேன். அதையும் மீறி சிலர் உங்களை வாடா போடா என அழைத்தால், அதற்காக அவர்களது நட்பையும் முறித்துவிடலாம். அது தப்பேயில்லை" என்று கமல் விளக்கம் அளித்தார்.

  கமல் எப்போதும் அப்படித்தான்

  கமல் எப்போதும் அப்படித்தான்

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே ஜிபி முத்து வட்டார வழக்கில் யாரையும் மரியாதை குறைவாக பேசிவிடக் கூடாது என அட்வைஸ் செய்திருந்தார். அதேபோல், கமலும் தன் மகள், பேத்தி வயது உள்ள பிக்பாஸ் போட்டியாளர்களைக் கூட வாங்க போங்க என்று மரியாதையாக தான் அழைத்து வருகிறார். மிக இளம் வயது போட்டியாளரான ஜனனியையும் அவர் வாங்க போங்க என்றே மரியாதையாக அழைக்கிறார். அதேபோல், எல்லா சீசன்களிலும் போட்டியாளர்களிடம் கோபம் காட்டினாலும் கூட, மரியாதை இல்லாமல் அழைத்ததோ, திட்டியதோ கிடையாது. இதன்மூலம் ஒருநாள் இரண்டு நாள்.பழக்கத்தில் வாடா போடான்னு பேசும் கலாச்சாரத்தை கமல் கண்டிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மரியாதை குறித்த விசயத்தில் கமல் இப்படி வெளிப்படையாக பேசியுள்ளது, ரசிகர்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

  English summary
  Actor Kamal interacted with contestants on Bigg Boss Season 6. Then he openly said that he doesn't like it if anyone speaks to me disrespectfully. Kamal's speech is going viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X