»   »  கமல் படத்துக்கு வந்த நிலைமையப் பாருங்க... ரெண்டே ரெண்டு பேர் பார்த்த தூங்கா வனம்!

கமல் படத்துக்கு வந்த நிலைமையப் பாருங்க... ரெண்டே ரெண்டு பேர் பார்த்த தூங்கா வனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபாவளிப் படங்களின் வசூல் அப்படி இப்படி என்று சம்பந்தப்பட்ட படங்களின் 'கணக்குப் பிள்ளை' ரேஞ்சுக்கு ஆளாளுக்கு ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதையே சிலர் செய்தியாக்கி பரபரப்பு காட்டுகிறார்கள்.

வெளியில் என்ன நிலவரம் என்பது தெரியாததால் வருகிற செய்திகள் இவை.


Kamal's Thoongavanam grabs only a couple of audiences!

தமிழ்ப் படங்களின் முக்கியச் சந்தையான வட அமெரிக்காவில் தீபாவளிப் படங்கள் வேதாளமும் தூங்காவனமும் தூள் கிளப்பிக் கொண்டிருப்பதாக சிலர் சொல்லிக் கொண்டிருக்க, அங்குள்ள உண்மை நிலையை ஒருவர் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். படம் வெளியான 10-ம் தேதிக்கு அடுத்த நாள் அமெரிக்காவின் முக்கிய நகரான சான் பிரான்சிஸ்கோவில் ஒரு அரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் வெறும் இரண்டுபேர்... யெஸ் ஜஸ்ட் இரண்டே இரண்டு பேர்கள்தான்.


மற்ற நகரங்களின் நிலையை விசாரித்தால், பெரும் அதிர்ச்சி. சில அரங்குகளில், சில காட்சிகளில் அதிகபட்சம் பத்துப் பேர். வேதாளம் படத்தின் நிலை இதைவிட கொஞ்சம் தேவலாம்.


சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் போன்ற தமிழர் அதிகம் வாழும் நகரங்களில் அதிகபட்சம் 20 முதல் 25 பேர் கூட இந்தப் படத்துக்கு தேறவில்லையாம்.


இந்த நிலையில் வேதாளம் ரூ 1.1 கோடியையும், தூங்காவனம் ரூ 1.40 கோடியையும் அமெரிக்காவில் வசூலித்துள்ளதாக தகவல் பரப்பி வருகிறார்கள். எண்ணி முடிச்சிட்டீங்களா இந்த கோடிகளை?

English summary
Here is a shocking fact on Thoongavanam Box Office. The Kamal starrer thriller has watched only by two audience on the next day of its release at San Francisco, USA.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil