சோ க்யூட்... செம வைரலாகும் ஆண்டவரின் அன்சீன் ஃபோட்டோ

சென்னை : உலகநாயகன் கமலஹாசனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தொடர்புடைய ஒவ்வொரு விஷயமும் வைரலாவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதிலும் அவர் டிவி, அரசியல் என வந்த பிறகு இன்னும் அவரை பற்றிய செய்திகள் அதிகம் வர துவங்கி விட்டன.

பிக்பாஸ் சீசன் 5, தினம் ஒரு முக்கிய விஷயத்திற்காக ட்வீட் என தினமும் தன்னை பற்றி அனைவரையும் பேச வைத்து வருகிறார் கமலஹாசன். இதற்கிடையில் கமலின் தீவிர ரசிகரான டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார் கமல்.

பிறந்தநாள் கொண்டாடிய படக்குழு

பிறந்தநாள் கொண்டாடிய படக்குழு

நவம்பர் 7 ம் தேதி கமல் பிறந்தநாள் என்றாலும், விக்ரம் ஷுட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினர் ஏற்கனவே கமலின் பிறந்தநாளை கொண்டாடி விட்டனர். இந்த ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி செம வைரலாகின. இவற்றுடன் சேர்த்து தற்போது கமலின் குழந்தை பருவ அன்சீன் ஃபோட்டோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

நடிப்பில் சிவாஜி கணேசனுக்க பிறகு உதாரணமாக சொல்லப்படுவது கமல் தான். இவர் குழந்தை பருவம் முதல் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல் தற்போது வரை சினிமாவில் புகழின் உச்சியில் தொடர்ந்து இருந்து வருகிறார் கமல்.

சாவித்திரி உடனான பாசம்

சாவித்திரி உடனான பாசம்

சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 5 துவக்க விழாவின் போது, நடிகையர் திலகம் சாவித்திரிக்கும் தனக்கும் இடையேயான பாசம் பற்றி வெளிப்படையாக சொன்னார் கமல். சிறு வயது முதலே ரசிகர்கள் மட்டுமல்ல திரை நட்சத்திரங்கள் பலரின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறார் கமல்.

 வைரலாகும் அன்சீன் ஃபோட்டோ

வைரலாகும் அன்சீன் ஃபோட்டோ

தற்போது, தரையில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற கமலின் சிறு வயது அன்சீன் ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பிளாக் அண்ட் ஒயிட் ஃபோட்டோவில் கமல் செம க்யூட்டாக உள்ளார். இந்த ஃபோட்டோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்தும், லைக் செய்தும் வருகிறார்கள். இந்த ஃபோட்டோ எப்போது எடுக்கப்பட்டது, யார் இதை இணையத்தில் பகிர்ந்தார்கள் என்பது தெரியவில்லை.

230 படங்கள்

230 படங்கள்

கமல் தனது நான்காவது வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் திரையுலக பயணத்தை துவக்கினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ஜனாதிபதி விருதினை பெற்றார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் 230 க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டார்கள்.

விக்ரம் படத்தில் பிஸி

விக்ரம் படத்தில் பிஸி

தற்போது விக்ரம் படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, ஃபத் ஃபாசில், பிக்பாஸ் ஷிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி, நரேன், செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 2022 ம் ஆண்டின் துவக்கத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X