அண்ணாத்த டிரைலர் சாதனையை முறியடித்த விக்ரம் கிளான்ஸ்...ஆச்சரியத்தில் ரசிகர்கள்
சென்னை : எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என தமிழ் சினிமாவின் ஒவ்வொரு கால கட்டத்திலும் போட்டி நடந்து கொண்டு தான் இருக்கிறது. தங்களின் ஃபேவரைட் ஹீரோக்களுக்கு ஆதரவாக அவர்களின் ரசிகர்கள் சண்டையிடுவதும் இப்போது வரை தொடர்ந்து வருகிறது.
விஜய் - அஜித் படங்களை தாண்டியும் ரஜினி - கமல் படங்கள் குறித்து அவர்களின் ரசிகர்கள் இப்போது வரை மோதிக் கொள்வது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ரஜினியின் அண்ணாத்த படத்தை கொண்டாடி வந்த ரசிகர்கள் கமலின் விக்ரம் பட ஃபஸ்ட் கிளான்ஸ் சாதனையை பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணாத்த வசூல் சாதனை
ரஜினி நடித்த அண்ணாத்த படம் தீபாவளி நாளான நவம்பர் 4 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. கொரோனாவிற்கு பிறகு உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட படம் அண்ணாத்த தான். இந்த சாதனையை வசூலிலும் நிரூபித்து வருகிறது அண்ணாத்த படம்.

எஸ்பிபி பாடலுக்கு வரவேற்பு
அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் செப்டம்பர் 10 ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபர் முதல் வாரத்தில் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி பாடிய இந்த பாடல் வெளியிடப்பட்ட 25 நாட்களில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

டிரைலர் படைத்த சாதனை
அதற்கு பிறகு அக்டோபர் கடைசி வாரத்தில் அண்ணாத்த டிரைலர் வெளியிடப்பட்டது. ஆனால் வெளியிடப்பட்ட 4 நாட்களிலேயே 10 மில்லியன்களை கடந்து இந்த டிரைலர் புதிய சாதனை படைத்தது. ஆக்ஷன், காமெடி, பஞ்ச் டயலாக், அதிரடி என பலவற்றின் கலவையாக வெளியான இந்த டிரைலர் ரசிகர்களை கொண்டாட வைத்தது.

மாஸான விக்ரம் ஃபஸ்ட் கிளான்ஸ்
இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6 ம் தேதி விக்ரம் படத்தின் ஃபஸ்ட் கிளான்ஸ் வெளியிடப்பட்டது. சிறையில் வில்லன்களின் துப்பாக்கி குண்டுகள் தெறிக்க, கையில் இரும்பு கேடயத்துடன் மாஸாக நடந்து வரும் கமலின் ஃபஸ்ட் கிளான்ஸ் பெரிய அளவில் பாராட்டப்பட்டுள்ளது.

24 மணிநேரத்தில் சாதனை
இந்த ஃபஸ்ட் கிளான்ஸ் வெளியிடப்பட்ட 24 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே 10 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த தகவலை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் ரீட்விட் செய்து, லைக் செய்துள்ளனர்.

ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ரஜினியின் அதிரடி, ஆக்ஷன் நிறைந்த அண்ணாத்த பட டிரைலர் நான்கு நாட்களில் செய்த சாதனையை, விக்ரம் படம் 24 மணி நேரத்திற்குள் நிகழ்த்தி உள்ளது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அண்ணாத்த படத்துடன் ஒப்பிடுகையில் விக்ரம் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படாமல், கமலின் பிறந்த நாளுக்காக இந்த ஃபஸ்ட் கிளான்ஸ் வெளியிடப்பட்டது.


Click it and Unblock the Notifications











