80 ஸ் லுக்கிற்கு மாறும் கமல்...வைரலாகும் விக்ரம் பிடிஎஸ் ஃபோட்டோஸ்

சென்னை : கைதி, மாஸ்டர் படங்களின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், கமலை மாறுபட்ட கோணத்தில் காட்டும் முயற்சியாக இந்த படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தில் வில்லன்களாக விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிக்கிறார்கள். கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். இவர்கள் தவிர அர்ஜுன் தாஸ், நரேன், ஆன்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் மிக முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.

விஜய் சேதுபதிக்கு 3 ஜோடி

விஜய் சேதுபதிக்கு 3 ஜோடி

மெயின் வில்லனான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களில் மைனா நந்தினியும், மகேஸ்வரியும் விஜய் சேதுபதியின் மனைவி ரோலிலும், ஷிவானி காதலி ரோலிலும் நடிக்கிறார்களாம்.

காரைக்குடியில் ஷுட்டிங்

காரைக்குடியில் ஷுட்டிங்

ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் காரைக்குடியில் நடைபெற்றது. காரைக்குடியை சுற்றி உள்ள பகுதிகளிலேயே ஒட்டுமொத்த படத்தையும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. காரைக்குடியில் விஜய் சேதுபதி, ஷிவானி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

வைரலாகும் பிடிஎஸ் ஃபோட்டோஸ்

வைரலாகும் பிடிஎஸ் ஃபோட்டோஸ்

இந்நிலையில் விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளதாம். இதுவும் காரைக்குடியின் புறநகர் பகுதிகளில் நடத்தப்படுகிறதாம். இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கு பின்னால் நடந்த பிடிஎஸ் ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

லைட்ஸ் ஆன்

லைட்ஸ் ஆன்

உயரமான டவர் அமைத்து, பெரிய கயிறுகள் மற்றும் வளையங்களில் கேமிராவை பொருத்தி ஷுட்டிங் நடத்தும் ஃபோட்டோக்கள் தான் வெளியாகி அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. விக்ரம் படத்திற்கு வசனம் எழுதும் டைரக்டர் ரத்னகுமார் தான் இந்த ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார். லைட்ஸ் ஆன் என்ற ஸ்டிக்கருடன் இந்த ஃபோட்டோக்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

இதே ஃபோட்டோவை நீண்ட பதிவுடன் அசிஸ்டென்ட் டைரக்டர் மெட்ராஸ் லோகி விக்னேஷும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அட்டகாசமாக துவங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது பகிர்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Recommended Video

Bigg Boss season 5 Exclusive Update, Contestants List | Kamal Hassan
இளமை தோற்றத்திற்கு மாறும் கமல்

இளமை தோற்றத்திற்கு மாறும் கமல்

இந்த படத்தில் de aging டெக்னாலஜி போன்றவற்றை பயன்படுத்தி 1980 களில் இருந்தது போன்ற லுக்கிற்கு கமலை மாற்றி உள்ளார்களாம். கமல் ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை தந்துள்ளது. கமலை மீண்டும் இளமை தோற்றத்தில் காண, அவர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X