நகக்கீறல்கள்.. ரத்தக்கறை.. வெளியானது விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்.. குழப்பங்களுக்கு முடிவு கட்டிய போஸ்டர்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கும் படம் விக்ரம். இந்தப் படத்தின் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.

விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் நடிகர் கமலின் 232-வது படம் ஆகும். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கால்ஷீட் பிரச்சனை

கால்ஷீட் பிரச்சனை

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. பின்னர் கால்ஷீட் பிரச்சனையால் அவர் விக்ரம் படத்தில் நடிக்கவில்லை என்றும் ஃபத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.

இருவருமே உள்ளனர்

இருவருமே உள்ளனர்

இந்நிலையில் இந்த குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

முகத்தில் கீறல்கள்

முகத்தில் கீறல்கள்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மூன்று பேருமே தாடியுடன் உள்ளனர். முகத்தில் ரத்தக்கறை, கீறல்கள் என யார் வில்லன்? யார் ஹீரோ என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மூன்று பேரும் மிரட்டலாக உள்ளனர்.

வீரமே வாகையைச் சூடும்

வீரமே வாகையைச் சூடும்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல், வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்... விக்ரம்... என குறிப்பிட்டுள்ளார்.

ரீடிவிட்ஸ் லைக்ஸ்

ரீடிவிட்ஸ் லைக்ஸ்

இதேபபோல் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதனை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் லைக் செய்து ரீடிவிட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X