Don't Miss!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
விக்ரம்..வெளியானது பத்தல பத்தல..அட இதிலயும் இல்லை ஒன்றியத்தின் தப்பாலே..கரெக்டாய் கட் செய்த படக்குழு
சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விக்ரம் படம்.
இந்தப் படம் திரையரங்குகளில் தற்போது திரையரங்குகளில் ஒரு மாதத்தை எட்டவுள்ளது.
இந்நிலையில் தற்போது படத்தின் பத்தல பத்தல வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஒரே
அலைவரிசையில்
அமுதாவும்
அன்னலட்சுமியும்..
ஜூலை
4
முதல்
ஒளிபரப்பாகும்
புதிய
தொடர்!

நடிகர் கமல்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விக்ரம் படம். இந்தப் படம் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து சரியான முறையில் தரப்பட்டுள்ளது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

கமல் கம்பேக்
கமல் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின்மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அவர் ரசிகர்களை எந்தவகையிலும் ஏமாற்றவில்லை. சிறப்பான பாடி லாங்குவேஜ், அதிகமான எனர்ஜி என அதகளப்படுத்தியுள்ளார் கமல். இவருக்கு மாற்று இவரேதான் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு படத்தில் இவரது பர்பார்மென்ஸ் காணப்படுகிறது.

வெற்றிகரமான ஒரு மாதம்
இந்தப் படம் திரையரங்குகளில் தற்போது ஒரு மாதத்தை பூர்த்தி செய்யவுவள்ளது. உலகளவில் அதிகமான வசூலை எட்டியுள்ளது. தொடர்ந்து 150 திரையரங்குகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தின் பத்தல பத்தல பாடல் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக லிரிக் வீடியோவாக வெளியாகி வரவேற்பை பெற்றது.

பத்தல பத்தல பாடல்
அந்த பாடலில் ஒன்றியத்தின் தப்பாலே என்ற வரிகள் இடம் பெற்று பலரது கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றது. இதையடுத்து படத்தில் இடம்பெற்ற பாடலில் இந்த வரிகள் நீக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது பாடலின் வீடியோ இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

ஒன்றியத்தில் தப்பாலே வரிகள்
இதில் ஒன்றியத்தின் தப்பாலே என்ற இந்த வரிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவை இந்த வீடியோ பாடலிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பாடலில் அந்த வரிகள் சேர்க்கப்பட்டிருக்கும் என்று நினைத்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பிரச்சினையை தவிர்த்த படக்குழு
எதுவாகிலும் பிரச்சினை வேண்டாம் என்ற படக்குழுவின் மனநிலையையே இது பிரதிபலிக்கிறது. தற்போது இந்தப் பாடல் வெளியான சில நிமிடங்களில் ஏறக்குறைய 6 லட்சம் வியூஸ்களை எட்டியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு இதன்மூலம் வெளியாகியுள்ளது.