சஸ்பென்ஸ் வைத்த விஜய் டிவி...சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம்...செம அறிவிப்பா இருக்கே

சென்னை : முக்கியமான பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக விஜய் டிவி கூறி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காமல் கமலின் விக்ரம் படம் பற்றிய மாஸாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து முடித்துள்ள விக்ரம் படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் முக்கிய ரோல்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பட்டையை கிளப்பும் அப்டேட்கள்

பட்டையை கிளப்பும் அப்டேட்கள்

ஜுன் 3 ம் தேதி பான் இந்தியன் படமாக விக்ரம் படம் ரிலீசாகும் என அறிவித்து விட்டார்கள். ஆனால் அதற்கு பிறகு விக்ரம் படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு அறிவிப்புமே வேற லெவலில் மாஸ் காட்டி வருகின்றன. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்கள் படக்குழுவினர். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வரும் கமல் படம் என்றாலும், அதையும் படம் பற்றிய அப்டேட்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

இளமையான கமலை பார்க்க ஆர்வம்

இளமையான கமலை பார்க்க ஆர்வம்

படத்தில் 10 கோடி செலவழித்து DeAging டெக்னாலஜி மூலம் கமலை இளமை தோற்றத்தில் காட்டி உள்ளார்கள் என்பது தான் படத்தின் பெரிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. மீண்டும் 80களில் இருந்த கமலை பார்க்க போகிறோம், கமலில் அசத்தலான டான்சை பார்க்க போகிறோம் என ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பிக்பாசில் கமல் சொல்வதை போல், விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடுகள் பற்றி பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாராமல் அசத்தல் அப்டேட்டை வெளியிட்டனர். ஆடியோ மற்றும் டிரைலர் ஆகிய இரண்டும் ஒரே நாளில் மே 15 ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது தான் அந்த அறிவிப்பா

இது தான் அந்த அறிவிப்பா

இதற்கிடையில் நேற்று முதல் விஜய் டிவியும், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரும் நாளை மாலை 6 மணிக்கு முக்கியமான பெரிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளதாக சஸ்பென்ஸ் வைத்து அறிவிப்பு வெளியிட்டு வந்தன. இதனால் இது பிக்பாஸ் பற்றிய அறிவிப்பாக இருக்குமோ, அல்லது வேறு என்ன நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பாக இருக்கும் என அனைவரும் சிந்தித்து வந்த நிலையில், அது நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு இல்லையாம், கமலின் விக்ரம் படம் பற்றிய அறிவிப்பாம். ஒரு ஸ்பெஷல் வீடியோ கிளிம்ப்ஸ் உடன் விக்ரம் படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

ஜூன் 3ல் 'விக்ரம்' ரிலீஸ்… ட்விட்டரில் மாஸ் Making Glimpse பகிர்ந்த கமல்!
அட செம மேட்டரா இருக்கே

அட செம மேட்டரா இருக்கே

கமலின் விக்ரம் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை ஸ்டார் விஜய் வாங்கி உள்ளது. அதே போல் டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கி உள்ளது. டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமம் இரண்டும் சேர்த்து 150 கோடிக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். விக்ரம் படத்தின் ரிலீசிற்கு பிறகு ஓடிடி ரிலீஸ் தேதியை ஹாட்ஸ்டார் அறிவிக்க உள்ளதாம். இந்த அறிவிப்பின் காரணமாக ட்விட்டரில் #Vikram ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X