”இந்தி தெரியாது போடான்னு ஆரம்பிச்சது மணிரத்னம் தான்”: கமல் சொன்னது இப்போ உண்மை ஆகிடுச்சே!

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் முன்னர் படக்குழுவினர் ப்ரோமோஷன் டூர் சென்றிருந்தனர்.

மும்பையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், ஐஸ்வர்யா உள்ளிட்ட பொன்னியின் செல்வன் டீம் பங்கேற்றது.

அப்போது நடந்த ஒரு தரமான சம்பவத்தின் வீடியோ சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் டூர்

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் டூர்

மணிரத்னம் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் கொச்சி, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி நகரங்களுக்கு சென்றிருந்தனர். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நந்தினி கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயும் கலந்துகொண்டார்.

கமல் சொன்னது உண்மையாச்சு

கமல் சொன்னது உண்மையாச்சு

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மணிரத்னத்துக்கு தரமான சம்பவம் ஒன்று நடந்தது. அப்போது கமல் ஏற்கனவே மணிரத்னம் பற்றி பேசியிருந்த ஒரு உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது சில மாதங்கள் முன்னர் தனியார் யூடியூப் தளத்துக்காக பேட்டி கொடுத்துள்ள கமல், "மணிரத்னம் இந்தி பேசமாட்டார், இந்தி தெரியாது, ஆனா மும்பையில் தான் படிச்சார், அது ஒரு வீம்பு. அவரு தான் முதன்முதலில் இந்தி தெரியாது போடா-வ தொடங்கி வச்சதுன்னு நினைக்கிறேன்" என பேசியுள்ளார்.

மும்பையில் நடந்தது இதுதான்

மும்பையில் நடந்தது இதுதான்

இப்போது மும்பையில் மணிரத்னத்துக்கு என்ன நடந்துச்சுன்னு நீங்களே பாருங்க. அதாவது பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பை சென்றிருந்த மணிரத்னத்திடம், அங்கிருந்த செய்தியாளர் இந்தியில் சில கேள்விகள் கேட்டார். அதனை ரொம்பவே உன்னிப்பாக கவனித்த மணிரத்னம், இறுதியாக எதுவுமே புரியாமல் அங்குமிங்கும் பார்க்கிறார். அதோடு பக்கத்துல இருந்த ஐஸ்வர்யா ராயிடம், "What did he say", அவரு என்ன சொல்றார்ன்னு வெள்ளந்தியாக விளக்கம் கேட்கிறார். கமல் பேசியதையும், அதன் பிறகு மணிரத்னம் இந்தி தெரியாமல் முழிப்பதும் ஒரே வீடியோவாக வெளியாகி இப்போது வைரலாகி வருகிறது.

மீண்டும் ட்ரெண்டிங்கில் இந்தி தெரியாது போடா

மீண்டும் ட்ரெண்டிங்கில் இந்தி தெரியாது போடா

தமிழ் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே 'இந்தி தெரியாது போடா' என்ற கேப்ஷன் ட்ரெண்டிங்கில் உள்ளது. அவ்வப்போது இந்த பஞ்சை வைரலாக்கி வரும் தமிழ்நாட்டு இளைஞர்கள், அதனை டீ ஷர்ட்டில் பிரிண்ட் செய்தும் ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் மணிரத்னத்துக்கு இந்தி தெரியாது போடா என கமல் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X