நடிப்பின் மைல் கல் சிவாஜி... ட்விட்டரில் பெருமைப்படுத்திய கமல்
சென்னை : நடிப்பிற்கு இலக்கணம், நடிகர் திலகம் என அனைவராலும் புகழப்படும் சிவாஜி கணேசன் மறைந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டது. நடிகரும், தயாரிப்பாளருமான சிவாஜி கிட்டதட்ட 50 ஆண்டுகளில் 288 படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக இருந்துள்ளார் சிவாஜி. 1960 லிலேயே கெய்ரோவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதினை பெற்றவர் சிவாஜி. இந்த விருதினை பெற்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி தான்.

சிவாஜியின் 20 ம் ஆண்டு நினைவு தினம்
தேசிய விருது, ஃபிலிம்பேர் விருது, தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த சிவாஜி 2001 ம் ஆண்டு ஜுலை 21 ம் தேதி காலமானார். சிவாஜி கடைசியாக 1999 ல் பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் நடித்தார்.

நடிப்பின் மைல் கல் சிவாஜி
சிவாஜியின் 20 ம் ஆண்டு நினைவு நாளான இன்று அவர் புகழ்ந்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் கமல். அவர் தனது ட்வீட்டில், திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பழைய ஃபோட்டோக்களை பகிர்ந்த கமல்
இத்துடன் சிவாஜியுடன் தான் எடுத்துக் கொண்ட 2 பழைய பிளாக் அண்ட் ஒயிட் ஃபோட்டோக்களையும் பகிர்ந்துள்ளார் கமல். பார்த்தால் பசி தீரும், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களில் கமல், சிவாஜி இணைந்து நடித்துள்ளனர்.

பல நடிகர்களுடன் நடித்த சிவாஜி
ரஜினி, விஜய், பிரபு, சத்யராஜ், முரளி உள்ளிட்ட பல நடிகர்கள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளனர். சிவாஜி தமிழில் மட்டும் 275 படங்களில் நடித்துள்ளார். மற்ற மொழிகளில் அதிகபட்சமாக தெலுங்கில் 9 படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











