»   »  விறுவிறு விஸ்வரூபம் 2... துருக்கி போனார் கமல் ஹாஸன்!

விறுவிறு விஸ்வரூபம் 2... துருக்கி போனார் கமல் ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சபாஷ் நாயுடுவுக்கு முன் விஸ்வரூபம் 2-தான் என்பதில் உறுதியாக உள்ளார் கமல் ஹாஸன். எப்படியும் அக்டோபர் அல்லது நவம்பரில் படம் வெளியாகிவிடும் என்கிறார்கள்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு படத்தை மீண்டும் பார்த்தவர், மீதம் எடுக்கவுள்ள 10 சதவீதக காட்சிகளுக்காக துருக்கி பறந்துவிட்டார்.

துருக்கியில்

துருக்கியில்

துருக்கி படப்பிடிப்பு முடிந்த பிறகு சென்னை திரும்பும் கமல், படத்தின் சிறு சிறு இடைவெளிகளை நிரப்பும் காட்சிகளுக்காக (பேட்ச் ஒர்க்) சென்னையில் உள்ள ராணுவ முகாமுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளாராம்.

வெளியீடு

வெளியீடு

படத்தை தமிழகம் முழுவதும் கமல் ஹாஸனே தனது சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் மூலம் வெளியிடுகிறார். தெலுங்கு, இந்தி ரைட்ஸையும் கமலே வைத்துள்ளார்.

பூஜா - ஆன்ட்ரியா

பூஜா - ஆன்ட்ரியா

கமல் ஹாஸனுடன், பூஜா குமார், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் நடித்துள்ள விஸ்வரூபம் 2- ஐ கமல் ஹாஸனே இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சர்ச்சை தொடருமா...

சர்ச்சை தொடருமா...

விஸ்வரூபம் முதல் பாகத்தை எடுத்த கமல், அதை டிடிஎச்சில் வெளியிடுவதாக அறிவித்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது தயாரிப்பாளர்கள் தரப்பில். சமரச முயற்சிகளுக்குப் பின்னர் 410 அரங்குகளில் தமிழகத்தில் வெளியானது. இத்தனை அரங்குகளில் வெளியான முதல் கமல் படம் இதுவே.

English summary
Kamal Haasan is currently in Turkey for the shoot of his big budget spy thriller ‘Vishwaroopam 2’.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil