»   »  தந்தையர் தினம்.. மகளுடன் படம் எடுத்துப் போட்ட கமல்ஹாசன்!

தந்தையர் தினம்.. மகளுடன் படம் எடுத்துப் போட்ட கமல்ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செலஸ்: சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் பிசியாக உள்ள கமல்ஹாசன் அதற்கு இடையே இன்று தந்தையர் தினத்தையொட்டி ஒரு சில புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன், ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் படம்தான் சபாஷ் நாயுடு. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படம் அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வருகிறது. முதலில் இப்படத்தை ராஜீவ்குமார் இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தற்போது சபாஷ் நாயுடுவை கமல்ஹாசனே இயக்கி வருகிறார்.

இந்நிலையில், மகள் ஸ்ருதி ஹாசனுடன் தான் எடுத்துக் கொண்ட சில படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கமல். லாஸ் ஏஞ்செலஸில் உள்ள எல்ஏ தியேட்டர் என்ற நாடக மன்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை.

புகைப்படங்களுடன் கூடவே, ‘இப்போதுதான் இங்கு சுற்றிப் பார்த்தோம். அருகில்தான் எங்களது பட ஷூட்டிங்' எனக் கமல் பதிவு செய்துள்ளார்.

சபாஷ் நாயுடு படத்தில் கமலின் இளைய மகளான அக்ஷராவும் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actor Kamalahasan has shared some photos of him with his daughter Shruri in facebook, which was taken in America.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil