For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரம்யாவுக்கு நோஸ் கட்.. அர்ச்சனாவுக்கு டோஸ்.. வளைச்சா? நிமிர்த்திடுவேன்.. நான் கேட்பேன்.. கமல் இடி!

  |

  சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் ஆரியை கார்னர் செய்தது பற்றி கமல் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

  சிரித்துக் கொண்டே ஆரியை போட்டுக் கொடுத்த ரம்யாவுக்கு நறுக்குன்னு ஒரு குட்டு வைத்தார் கமல்.

  அதே போல ஓவர் ஆக்டிங் பண்ண அர்ச்சனாவுக்கு செம டோஸ். புரமோவை பார்த்தே ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் ஆனந்தமாகி விட்டனர்.

  கமல் கச்சேரி

  கமல் கச்சேரி

  இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கச்சேரி சிறப்பா இருக்கும் என்பதையே ஒவ்வொரு புரமோக்களும் தெளிவுபடுத்தி உள்ளன. முதல் புரமோவில் மக்களின் ஓட்டுக்கள் செய்த மாற்றம் என்றும், இரண்டாவது புரமோவில் அர்ச்சனாவுக்கு பேக்கப் என்றும், மூன்றாவது புரமோவில் ஆரியை கார்னர் பண்ண பஞ்சாயத்தையும் கையில் எடுத்துள்ளார்.

  ஆரி விவகாரம்

  ஆரி விவகாரம்

  நரிக்கூட்டத்தின் தலைவியாக அர்ச்சனா மாறி, ரம்யாவை அனிதாவை கூட்டு சேர்த்துக் கொண்டு ஆரியை ஒதுக்கிய விவகாரத்தை கையில் எடுத்து தனது சாட்டையை இந்த முறை இன்னும் வேகமாக சுழற்றி அடித்துள்ளார் கமல். சாஃப்ட்டா போட்டியாளர்களை தடவி கொடுக்கிறார் அர்ச்சனா மீது பயம் என்கிற விமர்சனங்களுக்கு பதிலடி கிடைத்துள்ளது.

  இன்ஃபார்மர் ரம்யா

  இன்ஃபார்மர் ரம்யா

  அர்ச்சனா, ரம்யா பிளான் பண்ணி தன்னை ஓரங்கட்டியது குறித்து ஆரி கமலிடம் விளக்கும் போது, இடையே புகுந்த ரம்யா பாண்டியன், அந்த டீமில் நீங்களும் தான் இருந்தீங்க என்றார். நான் அவர் கிட்ட பேசுறேன் என ஆரி முறைக்க, உடனே கமலிடம் சிரித்துக் கொண்டே ரம்யா ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன் என்றார்.

  ரம்யாவுக்கு நோஸ் கட்

  ரம்யாவுக்கு நோஸ் கட்

  இன்ஃபார்மர் ரம்யா, கொஞ்சம் பாதிக்கப்பட்டவரையும் பேச விடுங்க என ரம்யாவுக்கு சரியான நோஸ் கட் கமல் கொடுத்ததாக பிக் பாஸ் எடிட்டர் புரமோவை சூடு பறக்க போட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார். இந்த முறையாவது நிகழ்ச்சியில் இதையெல்லாம் கட் செய்யாமல் காட்டுவார்களா?

  அர்ச்சனாவுக்கு டோஸ்

  அர்ச்சனாவுக்கு டோஸ்

  அப்படி, இப்படி, அப்படி இப்படி என எஸ்.ஜே. சூர்யா மாதிரி பேசி மழுப்பிய அர்ச்சனாவுக்கு டோஸ் கொடுக்கும் விதமாக ஒரே போடாக கமல் போட்ட சாட்டையடியை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், மறுபடி மறுபடி புரமோவை போட்டு பார்த்து ஆனந்த கூத்தாடி வருகின்றனர். வெளியே போகும் போதும் பேச்சுக்கு ஒண்ணும் குறையில்லை என கழுவி ஊற்றி வருகின்றனர்.

  நிமிர்த்திடுவேன்

  நிமிர்த்திடுவேன்

  மேலும், தனி நபர் செளகர்யத்துக்காக, (நீங்க சேஃபா பைனலுக்கு போகணும்னு) சட்டத்தை வளைக்க நினைச்சா, நிமிர்த்திடுவேன்.. நான் கேட்பேன் என அர்ச்சனாவுக்கு பொளேர் விட்டுள்ளார் கமல்ஹாசன். அப்பாடா ஒரு வழியா கமல் சார் அர்ச்சனாவுக்கு பயப்படாமல் பேசிட்டார் என பிக் பாஸ் ரசிகர்கள், பழைய கமல் சார் கம்பேக் என பாராட்டி வருகின்றனர்.

  விஜய் டிவி ஆள் இல்லை

  விஜய் டிவி ஆள் இல்லை

  ஆஜீத், கேபி, ஷிவானி, சோமசேகரை விடவா அர்ச்சனா வீக்கான போட்டியாளர் என்கிற கேள்வியும். அவர் விஜய் டிவி ஆள் இல்லை, ஜீ தமிழ் அதனால் தான் சீக்கிரமா வெளியே அனுப்புறாங்க என்றும், அர்ச்சனா அழுத அழுகைக்கு அவர் வெளியேறுவதே சரி, இனி ரியோவும் சோமும் ஒழுங்கா கேம் ஆடுவாங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

  காலியான அன்பு பெட்

  காலியான அன்பு பெட்

  அன்பு பெட்டில் இருந்த நிஷா போன வாரம் வெளியேறிய நிலையில், அடுத்த வார தலைவர் பதவிக்கான போட்டியின் ஜெயித்து அடுத்த வாரமும் சேஃப் ஆகிட்டோம் கப் நமக்குத் தான் என ஏகப்பட்ட கனவுகளுடன் இருந்த அர்ச்சனாவை வெளியே அனுப்பி, அன்பு பெட்டை மொத்தமாக காலி செய்து விட்டாரே கமல் என்கிற வருத்தமும் எழுந்துள்ளது.

  English summary
  Kamal Haasan slams Archana and Ramya Pandian over Aari issue in today third promo. Kamal discuss Aari about golden egg task.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X