twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல் பயணம்.. ஆன்மீக எண்ணம் பற்றிய கேள்விகளுக்கு கமல் ஓப்பன் டாக்!

    By Vignesh Selvaraj
    |

    கோலாலம்பூர் : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக மலேசியாவில் நடத்தப்பட்ட நட்சத்திரக் கலை விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

    நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதர்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட இந்த நட்சத்திரக் கலைவிழாவில் 300-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். நட்சத்திரங்கள் பங்குபெற்ற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

    நட்சத்திரக் கலைவிழாவில் கமல்ஹாசன், நடிகர் விவேக்கின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    மூன்று கமல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்

    மூன்று கமல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்

    "களத்தூர் கண்ணம்மா - சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை. அது ஒரு குழந்தை. அதன்பின்னர் காதல் மன்னன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதிலும் கொஞ்ச காலம் வாழ்ந்து பார்த்துவிட்டேன். களமிறங்கும் கமல் - அது என் குரல், உங்கள் குரல். என்னைப் பேச வைத்து கொண்டிருக்கும் குரல் எல்லாம் மக்களின் குரல் தான்."

    ஆன்மீகம் எட்டிப் பார்க்கிறதா?

    ஆன்மீகம் எட்டிப் பார்க்கிறதா?

    "நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் தான் பார்த்துக்கொள்வேன். இப்போது அப்படி தான் வயது கூட கூட ஞானமும், அனுபவமும், அறிவும் கூடும், அதை பகுத்தறியும் திறனும் கூடியே தீரும்."

    ட்விட்டர் தமிழ் பற்றி

    ட்விட்டர் தமிழ் பற்றி

    "சொல்ல வேண்டியதை அழுத்தி சொல்ல வேண்டும். சில விஷயங்களை பொத்தாம் பொதுவாக பேசும்போது அது கெட்டவார்த்தை போன்று தோன்றும். அதை தவிர்க்கவே சில நல்ல தமிழ் சொற்களை உபயோகிக்கிறேன். அந்த ட்வீட்கள் தமிழ் அறிஞர்களுக்கு புரிந்து விடாமல் போய்கிறது. அதுவும் நல்லதே."

    திறமைக்கான அங்கீகாரம்?

    திறமைக்கான அங்கீகாரம்?

    "நடனம், இசை, நடிப்பு, இயக்கம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் அறிந்தவர். உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா?" எனும் கேள்விக்கு பதிலளித்த கமல், "தேவை என்பது மனிதனுக்கு எல்லையில்லா ஒரு விஷயம். இது போதும் என்று நினைத்துவிட்டால் அவன் ஞானி ஆகிவிடுவான். எனக்கு எது தேவை என்பதே தெரியாமல் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்."

    எனக்கான தகுதி

    எனக்கான தகுதி

    "எனக்கான தகுதி என்ன என்பதை ரசிகர்களின் கரகோஷம் தான் உணர்த்துகிறது. அதை நான் பெற்றுவிட்டேனா என்பது தெரியவில்லை. அதற்கான முயற்சியில் தொடர்ந்து கொண்டே இருப்பேன். அதில் வெற்றி கிடைக்காமலும் போகலாம்."

    கழுத்தளவு தண்ணீரில் இறங்கிய இந்தப் பயணம்

    கழுத்தளவு தண்ணீரில் இறங்கிய இந்தப் பயணம்

    "இந்தப் பயணம் நான் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல, கணுக்கால் கூட நனையாமல் இருக்க வேண்டும் என்று தான் இருந்தேன். ஆனால் சென்னையில் எப்படி வௌ்ளம் தாக்கி, தண்ணீரில் மூழ்கடித்ததோ, அதுபோல் இந்த சமூக அவலம் தாக்கி எங்களை கழுத்தளவு தண்ணீரில் தள்ளி உள்ளது."

    தனி ஒருவனால் முடியாது

    தனி ஒருவனால் முடியாது

    "எங்களைச் சுற்றி அழுக்கான சில அசுத்தங்கள் சூழ்ந்து கொண்டுள்ளன. அதிலிருந்து மேம்படுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இது தனி மனித ஒருவனால் செய்ய முடியாது, அதற்கு தமிழர்களாகிய நாம் அனைவரும் இணைந்து செயலாற்றுவோம்."

    ஜோசியம் - ஜாதகம்

    ஜோசியம் - ஜாதகம்

    "எங்க அம்மா நிறைய ஜோசியம் பார்ப்பார்கள். ஆனால் அதை பொய்யாக்கி இருக்கிறேன். அதை எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்."

    எவ்வாறு நினைவு கூறப்பட வேண்டும்

    எவ்வாறு நினைவு கூறப்பட வேண்டும்

    "இருந்தான், வந்தான், சென்றான் என்றில்லாமல் இருக்கிறான் என்ற நிலையில் நிறைவு கொள்ள விரும்புகிறேன்." இவ்வாறு விவேக்கின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.

    English summary
    Rajinikanth and Kamal Haasan participated in the Star Art festival in Malaysia on behalf of the South Indian Artiste Association. Kamal Haasan answered to various questions of actor Vivek. To the question about spiritual thinking, "If I am an elephant, I will save from musth" Kamal replied.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X