Just In
- 9 min ago
அக்ரிமென்ட்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவிட்டல் ரசிகர்கள் ஷாக்!
- 18 min ago
'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்!
- 26 min ago
எனக்கு விழுற ஒரு ஒரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க!
- 34 min ago
தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் தமன்னா... குஷியில் ரசிகர்கள்!
Don't Miss!
- News
என் கடைசி ஆசை இதுதான்.. திமுகவின் கிராம சபை கூட்டத்தில் உருக்கமாக பேசிய துரைமுருகன்
- Sports
2021 ஆசியா கோப்பையிலுருந்து விலக முடிவு.. இந்திய அணி திடீர் திட்டம்.. யாருக்கு வைக்கப்பட்ட செக்!?
- Lifestyle
பெண்களே! இந்த காலத்தின்போது உங்க உடல் எடை அதிகரிக்குமாம்... கவனமா இருங்க..!
- Finance
15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..!
- Automobiles
உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை, சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா? சைலன்ட் கில்லர் ரம்யாயை சலித்தெடுத்த கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி, அர்ச்சனா, நிஷா, ஆரி என பலரையும் விளாசினார் கமல்.
இந்நிலையில் இன்றைய எபிசோடின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ரம்யா பாண்டியனை வச்சு செய்துள்ளார்.

என்ன பிரச்சனை என்றாலும்
ஆரம்பத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்று வந்தார் ரம்யா பாண்டியன். ஆனால் நாளாக நாளாக அவரது முகத்திரை கிழிந்து வருகிறது. பாலாஜியுடன் சேர்ந்து கொண்டு, அவரது பாணியிலேயே என்ன பிரச்சனை என்றாலும் தலையிட்டு கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறார்.

நமட்டு சிரிப்பு
பாலாஜிக்கும் ஆரிக்கும் இடையே நடந்த பிரச்சனையின் போதும் இடையில் புகுந்த ரம்யா ஆரியை ஏதோ ஒரு குற்றவாளியை போன்று பாவித்து வரிசையாய் கேள்விகளை தொடுத்தார். பாலாஜிக்கும் ஆரிக்கும் வெளியில் சண்டை நடக்கும் போதுக்கூட நமட்டு சிரிப்பு சிரித்தப்படி அமைதியாக கண்டு ரசித்தார்.

பின்னால் பேசி வருகிறார்..
மேலும் 8 வாரத்தில் 3 முறை ஜெயிலுக்கு போய்விட்டார் என்றும் அவர் பெரிய கடி என்றும் ஆரி குறித்து பின்னால் தரக்குறைவாக பேசினார். ஆரி மட்டுமின்றி ரியோ, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், அனிதா என அனைத்து ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் பின்னால் பேசி வருகிறார்.

ரம்யாவை காய்ச்சப் போகிறார்
தான் பர்ஃபெக்ட் என்பது போல் மற்ற அனைத்து ஹவுஸ்மேட்டுகளையும் நிற்க வைத்து கேள்வி கேட்டு வருகிறார். இதனை கவனித்து விட்டார் போல கமல். இன்றைய எபிசோடில் ரம்யாவை காய்ச்சப் போகிறார் என்பது மூன்றாவது புரமோவில் தெரியவந்துள்ளது.

ரம்யாவை டார்கெட் செய்த கமல்
இதில் பேசும் கமல், கால் செண்டர் டாஸ்க்கில் ரம்யா, ரமேஷை விடாமல் கேள்விகளை கேட்டு டார்ச்சர் செய்ததை போட்டு விளாசி இருக்கிறார். ரமேஷிடம் பேசும் கமல், ரம்யா உங்கள கேள்வி கேட்டு தாளிச்சுட்டாங்க போல.. என்று கேட்டப்படியே ரம்யா நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் ரமேஷ் பதில் சொன்னாரா என்கிறார்.

அர்ச்சனா ஹர்ட் பண்ணிடுவாங்க
தொடர்ந்து பேசும் கமல், உங்கள் பதில் என்ன சொல்லுங்கள் என்கிறார். அதற்கு பதில் சொல்லும் ரம்யா, ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் ரிவ்வியூ கொடுக்கிறார். அதன்படி, அர்ச்சனா சர்க்காஸ்ட்டிக்காய் யாரையாவது ஹர்ட் பண்ணிடுவாங்க அதுக்காக நான் நாமினேட் பண்ணிடுவேன்.

பாலா ஷிவானி காதல்?
தொடர்ந்து பேசும் ரம்யா, ஒரு சில இடங்களில் கண்ணை மறைக்குதோன்னு எனக்கு தோனுது என கூறுகிறார். அப்போது பாலாஜி மற்றும் ஷிவானிக்கு க்ளோஸ் அப் வைக்கப்படுகிறது. கண்ணிமைக்காமல் சிரித்தப்படி ரம்யா பேசுவதை பார்க்கிறார் ஷிவானி.

மாறிய முகம்
தொடர்ந்து கேபி.. என இழுத்து யோசிக்கிறார் ரம்யா. அதை பார்க்கும் கமல் இப்போ தெரியுதா கேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு என்று கூறுகிறார். கமல் அப்படி கேட்டதும் ரம்யாவின் முகம் அப்படியே மாறுகிறது. ரம்யாவின் சுய ரூபம் தெரிய தெரிய அவரது ரசிகர்களும் அவரை வெறுக்க தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.