இந்தியன் 2 படத்துக்காக கமல் எடுத்துள்ள ஹை-ரிஸ்க்: செட்டில் இருந்தவர்களை சிலிர்க்க வைத்த உலகநாயகன்

சென்னை: கமல் நடிப்பில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்ட கமல்ஹாசன், சிங்கிள் ஷாட் காட்சி ஒன்றில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிரட்ட காத்திருக்கும் இந்தியன் 2

மிரட்ட காத்திருக்கும் இந்தியன் 2

கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் 1996ல் வெளியான இந்தியன் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் எனக் கேட்டுக்கொண்டே இருந்த ரசிகர்களுக்கு, பல வருடங்களுக்குப் பிறகு கமலும் ஷங்கரும் இணைந்து செம்ம சர்ப்ரைஸ் கொடுத்தனர். அதன்படி, 2017ல் இந்தியன் 2 படம் பற்றி அறிவித்ததோடு, 2019ல் படப்பிடிப்பை தொடங்கினர். சென்னை, ராஜூமுந்திரி, போபால் ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், 2020ல் நடந்த கிரேன் விபத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்தியன் 2, ரசிகர்களுக்கு செம்ம மாஸ் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2வில் இணையும் 3 இயக்குநர்கள்

இந்தியன் 2வில் இணையும் 3 இயக்குநர்கள்

இந்தியன் 2 பட தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்ததால், பட்ஜெட் பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் 'RC 15' படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பும் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கவுள்ள ஷங்கர், தன்னிடம் உதவியாளர்களாக வேலை பார்த்த வசந்தபாலன், அறிவழகன், சிம்புதேவன் ஆகியோரை இந்தியன் 2 படத்திற்காக அழைத்துள்ளாராம்.

சிங்கிள் ஷாட்டில் ரிஸ்க் எடுத்துள்ள கமல்

சிங்கிள் ஷாட்டில் ரிஸ்க் எடுத்துள்ள கமல்

இந்தியன் 2வில் இணைந்துள்ள 3 இயக்குநர்களும், கமல் இல்லாத பகுதிகளை படமாக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கமல் நடிக்கும் காட்சிகளை மட்டும் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் 10 நிமிடங்கள் வரை ஓடும் ஒரு சிங்கிள் ஷாட் காட்சி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், கமல்ஹாசன் 14 மொழிகளில் வசனம் பேசி அசத்தியுள்ளதாகவும், அதனைப் பார்த்த படக்குழு மிரண்டு போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு இந்தக் காட்சி திரையரங்குகளில் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

விரைவில் இந்தியன் 2 சூப்பர் அப்டேட்

விரைவில் இந்தியன் 2 சூப்பர் அப்டேட்

இந்தியன் 2 திரைப்படம் முதலில் தொடங்கப்பட்ட போதே 70 சதவீதம் காட்சிகள் முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், எஞ்சியிருக்கும் 30 சதவீதம் காட்சிகளையும் விரைந்து முடிக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கேற்றபடி ஷெட்யூல் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், இந்தியன் 2 படத்தில் இருந்து புதிய அப்டேட்கள் விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X