Don't Miss!
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட கடவுளே..நேத்துதானே கடமை தவற மாட்டேன்னு சொன்னீங்க.. அப்போ இந்த வாரம் பிக்பாஸ்? கவலையில் ஃபேன்ஸ்?
சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி என்னவாகும் என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 நாட்களை எட்டியுள்ளது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
நடிகர்
கமல்ஹாசனுக்கு
கொரோனா
தொற்று...
ரசிகர்கள்
பாதுகாப்பாக
இருக்க
வேண்டுகோள்
வார இறுதி நாட்களில் பார்வையாளர்களை சந்திக்கும் நடிகர் கமல்ஹாசன், அகம் டிவி வழியாக ஹவுஸ் மேட்ஸ்களையும் சந்தித்து வருகிறார்.

விவாதிக்கும் கமல்
இந்த சந்திப்பின்போது வாரம் முழுக்க நடந்த விஷயங்கள் குறித்து ஹவுஸ்மேட்டுகளுடன் விவாதிக்கும் கமல் பாராட்ட வேண்டிய விஷயங்களுக்கு பாராட்டுவார். விளாச வேண்டிய விஷயங்களுக்கு விளாசுவார். மேலும் போட்டியாளர்களின் ஒரிஜினாலிட்டியை வெளியே கொண்டு வரும் வகையில் சில போட்டிகளையும் நடத்தி வருகிறார்.

கடமையை தவறியதே இல்லை
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பேசிய கமல்ஹாசன், கடந்த வாரம் சிகாகோவில் இருந்தேன். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி என்னவாகும்? யார் தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். நான் இதுவரை என் கடமையை தவறியதில்லை என்று கூறிய கமல் அது வெளியூர். இதுதான் வீடு, வெளியூர் சென்றாலும் வீட்டிற்குதான் வரவேண்டும் என்றார்.

கோவிட் தொற்று உறுதியானது
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ள கமல்ஹாசன், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.. என குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் என்னவாகும்?
கமல்ஹாசனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அப்படியானால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன ஆகும் யார் தொகுத்து வழங்குவார் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து 1 4 நாட்கள் குவாரண்டைனில் இருக்க வேண்டும்.

யார் தொகுத்து வழங்குவார்?
இதனால்
நடிகர்
கமல்ஹாசன்
குறைந்தது
இரண்டு
வாரங்களாவது
தன்னை
தனிமைப்படுதிக்
கொள்ள
வேண்டும்.
அப்படி
தனிமைப்படுத்திக்
கொண்டால்
பிக்பாஸ்
நிகழ்ச்சி
என்னவாகும்
என்ற
கேள்வி
எழுந்துள்ளது.
கமல்ஹாசனின்
டிவிட்டை
பார்த்த
இந்த
ரசிகர்
அப்போது
இந்த
வாரம்
பிக்பாஸ்
நிகழ்ச்சியை
தொகுத்து
வழங்குவார்
என
கேட்டுள்ளார்.

இறைவனை வேண்டுகிறேன்
அதே நேரத்தில் பல ரசிகர்கள் நீங்கள் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்றும் டிவிட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த ரசிகர், எங்களுக்கு உலகம் போற்றும் திரைக்காவியம் கொடுக்கவேண்டும் மற்றும் மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் தலைவா விரைவில் நலம் அடைய எல்லா இறைவனையும் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

உடலுக்குத்தான் ஓய்வே தவிர
கமல்ஹாசனின் டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், இந்த ஓய்வில் பல புத்தகங்களை கரைத்து குடிச்சுடுவீங்க... உங்க உடலுக்குத்தான் ஓய்வே தவிர... அறிவுக்கு இல்லை... சீக்கிரம் நலம்பெற்று வீடு திரும்புவீங்க... என்று பதிவிட்டுள்ளார்.

அலைச்சல் வேண்டாம் நம்மவரே
மற்றொரு ரசிகரான இவர், ஓயாத பயணம், சினிமா வேலை, பிக்பாஸ் சூட்டிங், கட்சி பணி, வெள்ளத்தின் போது மக்களோடு மக்களாக இருந்தது இந்த வயதில் இவ்வளவு அலைச்சல் வேண்டாம் நம்மவரே.. உங்கள் உடல் ஆரோக்கியத்தை விட எங்களுக்கு எதுவும் முக்கியம் இல்லை.. உங்கள் உடல், உயிர், சிந்தனை அனைத்தும் நாட்டுக்கு மிக முக்கியமானவை.. என அக்கறையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

கண்ணுதான் ஆண்டவரே!
கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்த இந்த ரசிகர், கண்ணுதான் ஆண்டவரே! சீக்கிரம் வந்துடுங்க! என இந்த வயதிலும் ஆக்டிவாக இருக்கும் கமல்ஹாசனுக்கு திருஷ்ட பட்டிருப்பதாக டிவிட்டியுள்ளார்.