கமலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் 80 களின் டாப் ஹீரோயின்... செம அப்டேட்
சென்னை : சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டதால் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை இன்னும் சில வாரங்களில் துவக்க டைரக்டர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்கின்றனர்.
இந்நிலையில் பாபநாசம் 2 படத்தில் நடிக்கவும் கமல் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை 45 நாட்களில் எடுத்து முடிக்க டைரக்டர் ஜீத்து ஜோசப் திட்டமிட்டுள்ளார். மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக் தான் பாபநாசம் 2.

மீண்டும் தயாரிக்கும் ஸ்ரீப்ரியா
கமலின் நெருங்கிய தோழியான ஸ்ரீப்ரியா தான் பாபநாசம் படத்தை தயாரித்தார். தற்போது பாபநாசம் 2 படத்தையும் இவர் தான் தயாரிக்க உள்ளார். எல்லாம் ஓகே என்றாலும் பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, தற்போது அவரிடமிருந்து பிரிந்து விட்டார்.

கவுதமிக்கு நோ சொல்லும் கமல்
இதனால் கவுதமிக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என கமல், டைரக்டரிடம் கூறி உள்ளார். ஆனால் கவுதமி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என ஜீத்து ஜோசப் நினைக்கிறார். இந்த குழப்பத்தாலேயே பாபநாசம் 2 படத்தின் வேலைகள் தள்ளி போகிறது.

கமலுக்கு ஜோடி மீனவா
கவுதமியை மாற்றும் முடிவில் கமல் உறுதியாக உள்ளதால் மலையாளம் த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்த மீனாவை கமலுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. த்ரிஷ்யம் 2 கன்னடம், தெலுங்கு ரீமேக்களிலும் மீனா தான் நடித்தார்.

எல்லா மொழியிலும் மீனா தானா
ஆனால் ஓடிடி.,யில் படம் ரிலீசாகும் போது அனைத்து மொழிகளிலும் மீனாவே நடித்தால் அது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விடும். இதனால் படத்தின் மீதான ஆர்வம் குறைந்து, அது வசூலை பாதிக்கும் என தயாரிப்பாளர் நினைக்கிறார். இதனால் வேறு நடிகையை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கமலுடன் நடிக்காத நதியா
தற்போது இந்த படத்தில் 80 களில் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக இருந்த நதியாவை கமலுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பாபநாசம் 2 படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 80 களில் புகழின் உச்சியில் இருக்கும் போது, ரஜினி, விஜயகாந்த் என ஏறக்குறைய அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நதியா நடித்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

முதல் முறையாக கமலுக்கு ஜோடியாகிறார்
இதனால் இந்த படத்திற்கு கமல் - நதியா ஜோடி சிறப்பானதாக இருக்கும். அது ரசிகர்களுக்கு புதிதாக ஒரு அனுபவத்தை தரும் என படக்குழு நினைக்கிறது. கமலுடன் ஜோடி சேர நதியா ஓகே சொன்ன பிறகு இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, விரைவில் பாபநாசம் 2 படப்பிடிப்பு துவங்கப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











