Don't Miss!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- News
என்னது எடிட்டா? நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார்.. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை சவால்!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
காமெடி பண்றதா இருந்தா அப்படியே உக்காருங்க... கமலிடம் மொக்கை வாங்கிய மைனா... இதுதான் தரமான சம்பவம்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் 21வது போட்டியாளராக அடியெடுத்து வைத்த மைனா நந்தினி தொடர்ந்து நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் கமல் முன்னிலையில் எப்போதும் மரியாதை இல்லாமல் பேசும் மைனா நந்தினிக்கு இந்த வாரம் தரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் சும்மாவே தூங்கி முழித்த ராம்... 60 நாள் சம்பளம் இத்தனை லட்சமா?

முதலில் அவுட் ஆன ராம்
கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, இதுவரை 62 நாட்களை கடந்துவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் என ஏற்கனவே கமல் அறிவித்துவிட்டார். அதன்படி முதல் ஆளாக நேற்றே ராம் எவிக்சன் ஆகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து யார் வெளியேறப் போகிறார் என்பது இன்று இரவு தெரிந்துவிடும். இந்த லிஸ்ட்டில் ஆயிஷாவும் ஜனனியும் முதல் இடத்தில் உள்ளனர். ஆனால், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் ட்விஸ்ட் வைத்துள்ளார்.

மைனா முகத்தில் மை பூசிய கமல்
முன்னதாக நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் கபட நாடக வேடதாரி என்ற டாஸ்க் கமல் முன்னிலையில் நடைபெற்றது. அதில், ரச்சிதா அதிக வாக்குகள் பெற்று முதலிட வர, மைனா நந்தினியும் விக்ரமனும் இரண்டாவது இடம் பிடித்தனர். ரச்சிதா, விக்ரமன் இருவருமே இதுகுறித்து விளக்கம் கொடுத்த நிலையில், மூன்றாவதாக மைனாவிடம் வந்தார் கமல். ஆனால், மைனா பேச ஆரம்பிக்கும் முன்னரே, "காமெடியாக பேசுவதாக இருந்தால் அப்படியே உக்காந்துருங்க மைனா, எனக்கு சரியான விளக்கம் தேவை" என சவுக்கடி கொடுத்தார்.

காரணம் இதுதானா?
பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் போதே, விக்ரம் படத்தில் நானும் நடிச்சிருக்கேன் சார் என கமலிடம் சீன் போட்டார் மைனா. ஆனால், அது எனக்கு படம் பார்க்குறவரை தெரியாதே என சாஃப்ட்டாக நோஸ்கட் கொடுத்தார் கமல். எப்போதுமே எல்லோரிடமும் விளையாட்டுத்தனமாக இருக்கும் மைனா, சில இடங்களில் சீரியஸ்னஸ் தெரியாமல் அதிகபிரசங்கித்தனமாக பேசி வருகிறார். முக்கியமாக கமல் முன்னிலையில் பேசும் போது மரியாதை இல்லாமல் நடந்துகொள்கிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இதையெல்லாம் மனதில் வைத்து தான் கமல் நேற்று சரியான சம்பவம் செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

மைனா திருந்துவாரா மாட்டாரா?
அதேபோல், கடந்த வாரம் மைனாவும் மணிகண்டனும் சொல்லிவைத்து விளையாடியது குறித்து பேசிய கமல், "நீங்க அப்படி விட்டுக்கொடுத்து விளையாடுவது சரியா" என கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவரை முழுமையாக பேசவிடாத மைனா "டேய்... நான் அப்பவே சொன்னேன்ல, இது பிரச்சினையாகும்ன்னு" என பக்கத்தில் இருந்த மணிகண்டனை அடித்து செல்லமாக விளையாடினார். கமல் அந்த இடத்தில் அவர்கள் இருவரையும் கண்டிக்கவில்லை என்றாலும், அவரது முகம் கொஞ்சம் சிவந்தது. மைனா அந்த இடத்தில் "டேய்" என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கவே கூடாது, முக்கியமாக டேய் என நடுவில் பேசியதே கமலை அவமதிக்கும் செயல் என நெட்டிசன்கள் சுட்டிக் காட்டி இருந்தனர். அதனால் தான் இந்த வாரம் மைனாவின் பக்கம் செல்லும் போதெல்லாம் கமல் கொஞ்சம் உஷாராகவே இருந்தார். ஆனாலும், நேற்றும் கூட மைனா சில இடங்களில் சீரியஸ்னஸே இல்லாமல் ஜாலியாக தான் கமலிடம் பதில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.