உங்க விருப்பப்படி தான் எல்லோரும் விளையாடனுமா...அபிஷேக்கை தெறிக்க விட்ட கமல்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 20 வது நாளான இன்று, ப்ரோமோவை பார்த்து விட்டு அபிஷேக்கிடம் கமல் என்னவெல்லாம் கேட்க போகிறார் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

இதில் இந்த வார டாஸ்க் பற்றி பேச்சை துவக்கினார் கமல். அப்போது அபிஷேக்கிடம் கருத்து கேட்டார். அப்போது வித்தியாசமாக விளையாட வேண்டும் என் நினைத்து ஃபன் ஆக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை கையாண்டதாக தெரிவித்தார் அபிஷேக். மற்றவர்களுக்காக விளையாடுகிறேன் என்றால் எனக்கு ஒரு பெயர் கிடைக்கும் என்பதற்காக தாமரைக்காக விளையாடுவதாக கூறியதாக கூறினார்.

 யாரு குழந்தை

யாரு குழந்தை

இதில் குழந்தைகளை மகிழ்விக்க வேண்டும் என்றால் அண்ணாச்சி தான் ஜெயிப்பார் என்றார் அபிஷேக். அப்போது குறுக்கிட்ட கமல், குழந்தைகளை வேலைக்கு வைக்கிறார்கள் என சொன்னீர்களே யாரை, எதற்காக என கேட்டார். அதற்கு அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு, என்னையா சார் கேட்குறீர்கள் என கேட்டார் அபிஷேக். கமல் ஆமாம் என்று சொன்னதும், பேச்சை வேறு பக்கம் திருப்பினார் அபிஷேக்.

அபிஷேக்கை கலாய்த்த கமல்

அபிஷேக்கை கலாய்த்த கமல்

இருந்தாலும் விடாமல், நான் அதை கேட்கவில்லை. இசைவாணியை எதற்காக குழந்தைகளை வேலைக்கு வைத்துள்ளார்கள் என்று சொன்னீர்கள் என நேராக கேட்டார். உடனே சமாளிப்பதற்காக, விளையாட்டு முனைப்பில் என்ன பேசுகிறேன் என்றே எனக்கு தெரியாமல் போய், விளையாட்டோடு ஒன்று விடுவேன் சார் என்றார். கமலும் நக்கலாக, கதாபாத்திரமாகவே மாறி விடுவீர்களா என்றார்.

நீங்க தான் முடிவு பண்ணனுமா

நீங்க தான் முடிவு பண்ணனுமா


அபிஷேக் விளக்கம் அளிக்கிறேன் என சமாளிக்க நினைத்தாலும் கமல் விடாமல், உங்க விருப்பப்படி தான் எல்லோரும் விளையாட வேண்டுமா. அவர்கள் விருப்பப்படி விளையாட கூடாதா என கேட்டார். இல்லை சார், மற்றவர்களை குழப்ப வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்காக தான் செய்தேன். அதற்காக இன்ஃப்ளூயன்ஸ் செய்வேன், டிரிகர் செய்வேன். அனைத்தும் செய்வேன் என்றார்.

ஒப்புக் கொண்ட அபிஷேக்

ஒப்புக் கொண்ட அபிஷேக்


தனது வாயாலேயே அபிஷேக் தான் செய்தவற்றை ஒப்புக் கொள்ளும் படி செய்ததற்காக கமலை ரசிகர்கள் பாராட்டி, வரவேற்றனர். அவங்க அவங்க கேமை அவங்க விளையாடட்டுமே என இரண்டு நாட்களுக்கு முன் சுருதி சொன்ன அதே விஷயத்தை கமல் கேட்டது பலருக்கும் பிடித்திருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X