»   »  டைரக்ஷனில் குதித்த கமல்... என்னாச்சு சபாஷ் நாயுடு பட இயக்குநருக்கு?

டைரக்ஷனில் குதித்த கமல்... என்னாச்சு சபாஷ் நாயுடு பட இயக்குநருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சபாஷ் நாயுடு படத்தை மலையாள இயக்குநர் ராஜீவ் குமார் இயக்குவார் என்று கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

ஆனால் அமெரிக்காவில் இப்போது அந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவர் கமல் ஹாஸன். ஒரு பாடல் காட்சியையே எடுத்து முடித்துவிட்டார். அடுத்து வசனப் பகுதிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.


Kamal turns director for Sabash Nayudu

என்னாச்சு ராஜீவ் குமாருக்கு?


லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கமல் அன்ட் குழுவினருடன் ராஜீவ் குமாரும் போயிருக்கிறார். போன இடத்தில் அவருக்கு கடும் காய்ச்சல் வந்துவிட்டதாம். இரண்டொரு நாளில் சரியாகி வந்துவிடுவார் என்று நினைத்தார்களாம் கமல் உள்ளிட்ட குழுவினர்.


ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்ததில் ராஜீவ் குமாருக்கு லைம் நோய் தாக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தார்களாம். இது ஒருவித வண்டு கடிப்பதால் வரும் பாக்டீரியா நோய். கடும் வலி ஏற்பட்டு செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளிவிடுமாம்.


Kamal turns director for Sabash Nayudu

இதனால் ராஜீவ் குமாரால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.


அமெரிக்காவில் மூன்று மாதங்களுக்குள் ஷூட்டிங்கை முடித்துவிட அனுமதி பெற்றுள்ளார் கமல் ஹாஸன். எனவே தாமதத்தைத் தவிர்க்க, இயக்குநர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.


ஒரு பாடல் காட்சியை முடித்து விட்ட கமல் ஹாஸன், அடுத்து வசனப் பகுதிகளை இயக்க ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்தில் கமல் மகளாக, நிஜ மகள் ஸ்ருதி நடிக்க, இன்னொரு மகள் அக்ஷரா உதவி இயக்குநராக வேலைப் பார்க்கிறார்.

English summary
Kamal Hassan has turned director for his forthcoming Sabah Nayudu due to the original director Rajeev Kumar fell sick.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil