»   »  ரஜினி ஹீரோ, டபுள் ரோல்.. கமல் வில்லன்.. இயக்குநர் ஷங்கர்! - இதெல்லாம் சாத்தியம்தானா?

ரஜினி ஹீரோ, டபுள் ரோல்.. கமல் வில்லன்.. இயக்குநர் ஷங்கர்! - இதெல்லாம் சாத்தியம்தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி - ஷங்கர் படம் பற்றி நாளுக்கு நாள் பஞ்சமே இல்லாத அளவுக்கு பரபரப்பு செய்திகள்.. இல்லையில்லை, வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அவற்றில் லேட்டஸ்ட் என்ன தெரியுமா... இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க கமல் ஒப்புக் கொண்டார் என்பதுதான்.

எந்திரன் 2தான் அந்தப் படம். ஆனால் இதுபற்றி யாரும் வாய் திறக்கமாட்டேன் என அடம் பிடிக்கிறார்கள்.

மும்பையில் ஆலோசனை

மும்பையில் ஆலோசனை

சமீபத்தில் ரஜினிகாந்த் மும்பை போய் வந்தது நினைவிருக்கலாம். ஆனால் என்ன காரணத்துக்காக போனார் என்று தகவல் வெளியாகவில்லை. அவர் மும்பை சென்றதே, எந்திரன் 2 படம் குறித்து ஆலோசிக்கத்தான் என்கிறார்கள்.

ஷங்கர்

ஷங்கர்

ரஜினி மும்பை சென்றிருந்தபோது, அங்கு ஷங்கரும் இருந்தாராம். இதை வைத்து இப்படி ஒரு முடிச்சைப் போட்டிருந்தனர். அப்போது இந்தப் படத்தில் மும்பை நடிகர் ஒருவரும் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றனர்.

கமல்

கமல்

இந்த நிலையில், அந்த மும்பை நடிகருக்குப் பதில் கமல்ஹாஸன் இந்தப் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைப்படி கமலுக்கு வில்லன் வேடமாம். பவர்புல் வில்லன் வேடம்!

ரஜினி டபுள்

ரஜினி டபுள்

எந்திரன் முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படத்தில் ரஜினி விஞ்ஞானி மற்றும் சிட்டி ரோபோவாக நடிப்பாராம்.

இந்தியாவிலேயே காஸ்ட்லி படம்..

இந்தியாவிலேயே காஸ்ட்லி படம்..

மேலே நீங்கள் படித்ததெல்லாம் உண்மையாக நடந்தால், ரஜினி - கமல் சேர்ந்து நடிக்கவில்லையே என்ற ரசிகர்களின் ஏக்கம் தீரும். இந்தியாவிலேயே காஸ்ட்லியான படம் என்ற பெயரும் கிடைக்கும்.

English summary
Kollywood reports says that Kamal Hassan is accepted to play villain to Rajini in Enthiran 2.
Please Wait while comments are loading...