»   »  பிக் பாஸை பிரபலப்படுத்தத்தான் அரசியல் பேசுகிறாரா கமல் ஹாஸன்?

பிக் பாஸை பிரபலப்படுத்தத்தான் அரசியல் பேசுகிறாரா கமல் ஹாஸன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஸ்வரூபம் பட பஞ்சாயத்திற்கு பின்னர் தமிழக அரசியல்களத்தின் மையப் புள்ளியாக சில நாட்களாக மையம் கொண்டுள்ளார் கமல் ஹாஸன்.

தனியார் தொலைக்காட்சிகள் அவரைப் பற்றி விவாத மேடை நடத்தி பிழைப்பு நடத்தி வருகின்றன. கமலஹாசன் தமிழக அரசை விமர்சித்து பேசுவது நியாயம் தான், அது தமிழக மக்களின் பொருமலாக, குரலாகப் பார்த்து தங்களை அமைச்சர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கமலஹாசனுக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறது திமுக தலைமை.

Kamal uses politics to promote Big Boss

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவசர அவசரமாக கமலஹாசன் ஊழல் மலிந்த தமிழக அரசு என விமர்சனம் செய்தது சரிதான் என்று அறிக்கை விடுகிறார். அரசியலுக்கு வந்து விட்டு ஊழல் பற்றி பேசு என்கிறார் அமைச்சர் ஒருவர் எங்களை விமர்சிக்ககமலுக்கு தகுதியில்லைஎன்று ஒரு அமைச்சர் பேசுகிறார்.

பாஜக மாநில தலைவர் தமிழிசையோ ஜெயலலிதா இருந்த போது கமல் ஏன் ஊழல் பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பி குட்டையை குழப்புகிறார். இவர்கள் அனைவரும் அரசியலில் மட்டுமல்ல சினிமாக்காரர்களை அனுமானிப்பதில் தவறு செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

கமலஹாசன் அரசியல் விமர்சனம் செய்பவர்தான். ஆனால் தற்போது அவர் பேசிய, பேசி வருகிற அரசியல் விமர்சனங்கள் தமிழக மக்கள் நலன் சார்ந்தது அல்ல.

தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, குடி தண்ணீர், டெல்டா விவசாயம் பொய்த்து போனது என மக்களின் அடிப்படையான ஜீவாதார பிரச்சினைகள் பற்றி பேசவோ, நீட் தேர்வை ரத்து செய்யவோ உரிமைக் குரல் எழுப்பவில்லை. தனியார் தொலைக்காட்சி ஒன்று வியாபார நோக்குடன் நடத்தி வரும் நிகழ்ச்சியின் தலைமை பொறுப்பு வகிக்கும் கமலஹாசன் தனது நிகழ்ச்சியை பிரபலப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அவருக்கு உண்டு. அதற்கு கமலஹாசன் எடுத்த ஆயுதம்தான் தமிழ்நாட்டு அரசியல். அரசின் ஊழல்களை பற்றி பேசினால் எதிர்ப்புகள் அதிகமாகும். அப்போதுதான் நடத்தும் ஷோ பிரபலமடையும் என்ற அவரின் நம்பிக்கை வீண் போகவில்ல.

நடிகரின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் தாங்களும் பிரபலமடையலாம் என்ற அவர்களின் கணக்கு தவறாகவில்லை.

இந்த சூட்சுமம் தெரியாமல் - புரியாமல் தமிழக அரசியல்வாதிகள் கமல்ஹாசனுக்கு ஆதரவு குரல் எழுப்பி வருவது வேடிக்கையானதே!

- ராமானுஜம்

English summary
The writer says that Kamal Hassan's political comments are pre planned publicity stunts to promote his Big Boss.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil