சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம்... கமல், விஜயகாந்த், ஏஆர் ரஹ்மான் குடியரசு தின வாழ்த்து

சென்னை: நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும், மாநிலங்களில் ஆளுநர்களும் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகின்றனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களும் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 கமல் குடியரசு தின வாழ்த்து

கமல் குடியரசு தின வாழ்த்து

நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும், மாநிலங்களில் ஆளுநர்களும் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். மேலும், முப்படை வீரர்களின் அணிவகுப்பும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில், நடிகர் கமல் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு மனிதரும் சமமாக நடத்தப்படும்போதுதான் குடியரசு அதன் முழுமையான அர்த்தத்தை எட்டுகிறது. நாட்டின் இறையாண்மை குடிமக்களிடமே நிலைகொண்டுள்ளது என்பதை உணர்த்திய முன்னோடிகளை வணங்கி சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம். குடியரசு தின நல்வாழ்த்துகள்" என ட்வீட் செய்துள்ளார்.

 விஜயகாந்த், சிரஞ்சீவி வாழ்த்து

விஜயகாந்த், சிரஞ்சீவி வாழ்த்து

அதேபோல் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது திரைப்படங்களில் தேசப்பற்று குறித்து பஞ்ச் வசனம் பேசி ரசிகர்களிடம் பிரபலமான விஜயகாந்த், 74வது குடியரசு தின வாழ்த்துகள் என ட்வீட் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் "விலை மதிப்பற்ற உலகின் மிகப் பெரிய அரசியலமைப்பு, ஜனநாயகத்தை கட்டமைத்து கொடுத்த முன்னோடிகளுக்கு சல்யூட், அவர்களுக்கு வணக்கம் செலுத்துவோம். நம் தாய்நாடு என்றென்றும் வளமாக இருக்கட்டும், இந்தியர்கள் அனைவருக்கும் 74வது குடியரசு தின வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

 இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வாழ்த்து

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வாழ்த்து

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளார் ஏஆர் ரஹ்மானும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இனிய குடியரசு தின வாழ்த்துகள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுன் குடியரசு தின வாழ்த்துக் கூறி ட்வீட் செய்துள்ளார். அதில், "இந்தியர்கள் அனைவருக்கும் எனது 74வது குடியரசு தின வாழ்த்துகள். நமது தேசத்தை இயக்கி வரும் அரசியல் சாசனம் செயல்படுத்தப்பட்ட தினத்தை கொண்டாடுவோம்" என பதிவிட்டுள்ளார்.

 மோகன்லால், மம்முட்டி வாழ்த்து

மோகன்லால், மம்முட்டி வாழ்த்து

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் குடியரசு தின வாழ்த்து தெர்வித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "74வது குடியரசு தினத்தில் நமது நாட்டிற்கு தொடர்ந்து விஸ்வாசமாக இருப்போம். நமது பாரம்பரியத்தின் பெருமையான வேற்றுமையில் ஒற்றுமையுடன் குடியரசு தினத்தை கொண்டாடுவோம். நமது தேசத்தை பெரும் கொண்டாட்டங்கள் உடனும், தேசபக்தி உணர்வுடனும் கொண்டாடுவோம்" என பதிவிட்டுள்ளார். மோகன்லால் நடித்துள்ள Alone திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மலையாள மெகாஸ்டார் மம்முட்டியும் குடியரசு தின வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X