பின் விளைவு பயங்கரமா இருக்கும்...அனைவர் முன்னிலையிலும் நிரூப்பை எச்சரித்த கமல்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிறைவு பகுதியை நெருங்கி வருகிறது. 80 நாட்கள் கடந்து விட்ட நிலையில் அடுத்து வெளியேற போவது யார் என முடிவு செய்ய முடியாமல் விஜய் டிவி உள்ளிட்ட அனைவரும் குழம்பிப் போய் உள்ளனர்.

ரசிகர்கள் வழக்கமாக எதிர்பார்க்கும் ஃபிரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் வந்து அன்பை பொழிந்தனர். அதே சமயம் ரசிகர்கள் எதிர்பார்த்த சுவாரஸ்யமான நிகழ்வு ஏதும் நடக்கவில்லை.

ஃபினாலே டிக்கெட் யாருக்கு

ஃபினாலே டிக்கெட் யாருக்கு

அடுத்து ஃபினாலே டிக்கெட் யாருக்கு வழங்கப்படும், ஷுட்கேசில் அனுப்பப்படும் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. உறவினர்கள் வந்து சென்ற பிறகு போட்டியாளர்கள் ஒற்றுமையாக, பாசமாக மாறி உள்ளனர். இவர்களில் யாரை மக்கள் வெளியேற்ற போகிறார்கள் என்ற கேள்வி மிகப் பெரியதாக எழுப்பப்பட்டுள்ளது.

கன்ஃபஷன் ரூமிற்கு கூப்பிடலாமா

கன்ஃபஷன் ரூமிற்கு கூப்பிடலாமா

இந்நிலையில் இன்றைய வார இறுதி எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முதல் ப்ரோமோவில் கமல், இத்தனை நாட்கள் நாகரீகம் கருதி பட்டும் படாமல் சொல்லி வந்தேன். இனி அப்படி இருக்க முடியாது. கன்ஃபஷன் ரூமிற்கு கூப்பிடலாமா என கேட்கிறார்.

ஏன் கயிற்றை விட்டீர்கள்

ஏன் கயிற்றை விட்டீர்கள்

இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில், நிரூப், பிரியங்கா இரவு முழுவதும் கயிற்றை பிடித்துக் கொண்டிருந்தீர்கள். பிறகு ஏன் விட்டீர்கள் என கேட்கிறார் கமல். அதற்கு பதிலளிக்கும் நிரூப், நிரூப் கேப்டனாக வேண்டாம். நல்ல கேப்டனாக இருக்க மாட்டான் என கூறியது ஏற்க முடியவில்லை. அதனால் தான் கோபத்தில் கயிற்றை விட்டேன் என்கிறார் நிரூப்.

பின் விளைவு கடுமையா இருக்கும்

பின் விளைவு கடுமையா இருக்கும்

அது என்ன உங்க ஸ்டாட்டர்ஜியா என பிரியங்காவிடம் கமல் கேட்க அவரோ, பொண்ணுங்க பக்கத்தில் இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை என அவன் சொல்லிக் கொண்டே இருந்தான் என்கிறார். அதற்கு கமல், நீங்க பயன்படுத்துனீர்களே வார்த்தைகள் Evil, Selfish. அதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என நிரூப்பை எச்சரிக்கிறார்.

பிரியங்காவிற்காக பேசுவாரா கமல்

பிரியங்காவிற்காக பேசுவாரா கமல்

இதை பார்த்து விட்டு ரசிகர்கள், ப்ரோமோ எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா எபிசோட் எப்படி இருக்கும். இதுலயாவது கமல் சார் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசுவாரா. இந்த வாரம் அக்ஷரா தான் எலிமினேஷனா என பலவிதமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X