»   »  இந்த கூவத்தை தூய்மை செய்ய வரும் கங்கைக்கு வாழ்த்துக்கள்:பிக் பாஸ் பிரபலம் #Rajinikanthpoliticalentry

இந்த கூவத்தை தூய்மை செய்ய வரும் கங்கைக்கு வாழ்த்துக்கள்:பிக் பாஸ் பிரபலம் #Rajinikanthpoliticalentry

Posted By:
Subscribe to Oneindia Tamil
அரசியலுக்கு வருவது உறுதி... ரஜினியின் பரபரப்பு பேச்சு

சென்னை: தனிக் கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்தை வாழ்த்தி திரையுலக பிரபலங்கள் ட்வீட்டியுள்ளனர்.

தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சிஸ்டத்தை மாற்றப் போவதாகவும், இந்த ஜனநாயகப் போரில் நம் படை இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வாழ்த்து

சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக என கமல் ஹாஸன் வாழ்த்தியுள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி ஆனால் ஆனந்த அதிர்ச்சி! அளித்து விட்டார் ரஜினி... இனி அவர் பின் வாங்கக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறல் கூடாது. சட்டம் ஒழுங்கு முக்கியம். வாழ்த்துக்கள் என விவேக் தெரிவித்துள்ளார்.

தலைவர்

அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்தை வாங்க தலைவா என்று வாழ்த்தியுள்ளார் இயக்குனர் அறிவழகன்.

வாங்க

வாங்க வாங்க என்று ரஜினியை வரவேற்று ட்வீட் போட்டுள்ளார் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி.

கங்கை

இந்த கூவத்தை தூய்மை செய்ய வரும் கங்கைக்கு வாழ்த்துக்கள் 💐 💐 💐 என நடிகை ஆர்த்தி ட்வீட்டியுள்ளார்.

கடவுள்

எது நடந்தாலும் கடவுளும், தமிழக மக்களுக்கும் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள். வாழ்த்துக்கள் சார் என்று ட்வீட்டியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

English summary
Kollywood celebrities took to twitter to wish superstar Rajinikanth who has taken an important decision about his political entry. Rajini has decided to float a new party.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X