ரசிகரா?நகலா?...கமலுடன் கமல் பேசும் காட்சி...டிரெண்டாகும் வீடியோ

சென்னை : விக்ரம் நாளை ரிலீசாக போகும் சமயத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு கமலுடன், கமல் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது.

நாளை ரிலீசாக உள்ள கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. 4 மொழிகளில் 5000 தியேட்டர்களில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இதற்காக கடந்த 10 நாட்களாக கமல் உலகம் முழுவதும் தீவிர ப்ரொமோஷனில் ஈடுபட்டு வருகிறார்.

சர்ப்ரைஸ் கொடுத்த கமல்

சர்ப்ரைஸ் கொடுத்த கமல்

விக்ரம் படம் எப்படி இருக்கும், சூர்யாவின் ரோல் என்ன, விக்ரம் படத்தின் ஓப்பனிங் டே வசூல் எவ்வளவு வரும், வசூல் சாதனை படைக்கும் விக்ரம் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் விக்ரம் ப்ரோமோஷனுக்காக கமல் ரசிகர்களை சந்தித்த நிகழ்வுகளும் நடந்துள்ளது. சமீபத்தில் ஹாலிவுட் நிகழ்ச்சி பாணியில் தன்னை பற்றி உணர்ச்சி பூர்வமாக பேசிக் கொண்டிருக்கும் ரசிகரின் பின்னால் வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார் கமல்.

கமலுடன் பேசும் கமல்

கமலுடன் பேசும் கமல்

தோற்றம், குரல், பாடி லேங்வேஜ் என அனைத்திலும் அச்சு அசலாக கமல் போலவே இருக்கும் அவரின் அதிதீவிர ரசிகர், கமல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். கமலை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும். அவர் எனக்குள் ஒருவன் என அந்த ரசிகர் சொல்லிக் கொண்டிருக்கையில் பின்னால் இருந்து வரும் கமலின் குரலை கேட்டதும் மண்டியிட்டு, கண் கலங்குகிறார். பிறகு கமலிடமே கமல் குரலில் பேசி அசர வைத்துள்ளார்.

கமலாகவே வாழும் ரசிகர்

கமலாகவே வாழும் ரசிகர்

தான் மிமிக்ரி பண்ணவில்லை என்றும், கமலாகவே வாழ்வதாகவும் கமலின் குரலிலேயே பேசுகிறார். கமலுக்கு பரிசு ஒன்றை கொடுக்கும் அவர், தனக்கு அடுத்த நாள் பிறந்தநாள் என்பதை கூறி கமலிடம் வாழ்த்து பெறுகிறார். கமலை சந்திக்க வேண்டும் என்பது தன்னுடைய 46 வருட தவம் என்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நிஜமாகவே இவர் கமலின் ரசிகர் தானா அல்லது கமலின் நகலா என்ற சந்தேகம் வருகிறது. கமல், கமலுடன் பேசும் இந்த வித்தியாசமான வீடியோ பலரையும் ஆச்சரியப்பட வைத்து, கவர்ந்துள்ளது.

நீங்க கமல் ஆக முடியாதுங்க

இதை பார்த்த நெட்டிசன்கள், எப்படிங்க அப்படியோ கமல் போலவே பேசுறீங்க. இவர் தான் உண்மையான லெஜண்ட் என பாராட்டி உள்ளனர். என்ன தான் ரசிகர் என்பதற்காக இப்படியா. நீங்கள் என்ன தான் கமல் போலவே அனைத்தையும் செய்தாலும் நீங்கள் கமல் ஆகி விட முடியாது. ரசிகர் என்பதற்காக இவர் தன் அடையாளத்தையே தொலைத்து விட்டாரே என பலர் வேதனையாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X