»   »  3 ஆண்டுகளுக்குப் பிறகு தூசி தட்டப்பட்டும் கமலின் விஸ்வரூபம் 2!

3 ஆண்டுகளுக்குப் பிறகு தூசி தட்டப்பட்டும் கமலின் விஸ்வரூபம் 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒருவழியாக விஸ்வரூபம் 2 படத்தை ரசிகர்கள் பார்வைக்குக் கொண்டுவரப் போகிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் சாத்தியங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பெரும் சிக்கலுக்கிடையில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது விஸ்வரூபம் படம். இந்தப் படத்தை எடுக்கும்போதே, அதன் இரண்டாம் பாகத்துக்கான காட்சிகள் 40 சதவீதத்தை எடுத்துவிட்டார் கமல்.


Kamal works on Viswaroopam 2 release

விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு கணிசமான விலைக்கும் விற்றுவிட்டார். ஆனால் படம் மீதியுள்ள காட்சிகளை எடுக்க மேற்கொண்டு கமல் பணம் கேட்டதால், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தர மறுத்தார். இதைத் தொடர்ந்து படம் கிடப்பில் போடப்பட்டது.


அதன் பிறகு கமல் நடித்த மூன்று படங்கள் வெளியாகி, நான்காவது படமான சபாஷ் நாயுடு தொடங்கப்பட்டு, கமல் விபத்தில் சிக்கியதால் பாதியில் நிற்கிறது.


சபாஷ் நாயுடு படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளதால், இப்போது விஸ்வரூபம்-2 படத்தை தாமே வெளியிட கமல் முயற்சி மேற்கொண்டுள்ளார்.


படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளனவாம். படத்தின் இசைக் கோர்ப்பு வேலை தொடங்கியுள்ளது. மற்ற பணிகளையும் இன்னும் இரு மாதங்களுக்குள் முடித்துவிட்டு, அக்டோபரில் படத்தை வெளியிடும் திட்டத்தில் உள்ளாராம் கமல் ஹாஸன்.

English summary
Kamal Hassan is again taking his long delayed Viswaroopam 2 and the post production works are going on, as per sources.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil