»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

தமிழ் அழிந்து கொண்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஆங்கிலத்தில்தான் தமிழ்என்று எழுதிப் பார்க்க முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

கோவை சங்கரா கண் மருத்துவமனையும், நடிகர் கமல்ஹாசன் நற்பணி மன்றமும்இணைந்து புதிய கண்ணொளித் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன. இத்திட்டத்தைசங்கரா மருத்துவமனையில் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.

துவக்க விழாவின்போது நோயாளிகளுக்கு உதவிகள் வழங்கிய கமல்ஹாசன் பின்னர்நிருபர்களிடம் பேசுகையில், தர்மம் என்பது பணம் கொடுப்பது மட்டுமல்ல. அநதபணம் விரைவில் செலவாகிவிடும். பிச்சைக்கார்களுக்கு பணம் கொடுப்பது கூட தர்மம்ஆகாது. தர்மம் என்பது எல்லா வகைகளிலும் பிறருக்கு உதவி செய்வதுதான்.

எனக்கு அரசியலில் நாட்டமோ விருப்பமோ கிடையாது. 15 ஆண்டுகளுக்கு முன் என்ரசிகர்கள் நற்பணி மன்றங்களை துவக்கினார்கள். நற்பணிகளில் அனுபவம் இல்லாதஎனக்கு சங்கரா கண் மருத்துவமனை நல்ல நிறுவனமாக கிடைத்தது.

எம்.ஜி.ஆர் நடிககும் படங்களில் சிகரெட் பிடிக்க மாட்டார். இப்போது எங்குபார்த்தாலும் பான் பராக்தான். நான் நடித்த ராஜபார்வை படத்தில் கண்களைப் பற்றிகூறினேன். தெனாலி படத்தில் கூறியதை விட நல்ல கருத்தை ஹேராம் படத்தில்கூறினேன். ஆனால் அது மக்களிடம் சரியாக சென்றடையவில்லை.

அபூர்வ சகோதரர்கள் மூலம் குள்ளமாக இருப்பவர்களின் ஏக்கத்தைக் கூறினேன். மைக்டைசன் நம் அருகில் வந்து நின்றால் நாம் கூட குள்ளம்தான்.

தமிழ் அழியும் அபாயம் இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இனி ஆங்கிலத்தில்தமிழ் என எழுதி பார்க்கும் நிலைதான் வரும்.

நான் பாரதியாரை மதிக்கிறேன். கழிப்பிடங்களில் ஆண்கள் என்ற இடத்தில் ஆண்படம் போட்டு முண்டாசு கட்டி மீசை முறுக்கியது போல் வரைந்திருப்பது கண்டுசம்பந்தப்பட்டவர்களிடம் இது பாரதி போல் இருக்கிறது மாற்றுங்கள் எனகூறியிருக்கிறேன்.

ஆளவந்தான் கதை பற்றி தற்போது சொல்ல முடியாது என்றார் அவர்.

முதல் முகாம் பரமக்குடியில் ...

முன்னதாக கண்ணொளித் திட்டத்தின் கீழ் பரமக்குடியில் முதல் முகாம்ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் 265 பேருக்கு மருத்துவப் பரிசோதனைநடத்தப்பட்டது.

சங்கரா மருத்துவமனை டாக்டர்கள் குழு இவர்களுக்க பரிசோதனைகளைச் செய்தது.அறுவைச் சிகிச்சை தேவைப்பட்ட 40 பேர் கோவைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.அவர்களுக்கு இலவசமாக கண் லென்ஸ் பொருத்தப்படும்.

பரமக்குடி தவிர தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இந்த சேவைஅளிக்கப்படவுள்ளதாக கோவை சங்கரா கண் மருத்துவமனை நிர்வாக அறங்காவலர்டாக்டர் ரமணி கூறினார்.

"இந்தியனுக்கு வயது 46

Read more about: cinema kamalhassan tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil