»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனின் முன்னாள் சண்டியர்- இந் நாள் தலைப்பில்லா படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா டிசம்பர் 5ம் தேதி சென்னையில் ரசிகர்கள் மத்தியில் நடக்கிறது. அப்போது படத்தின் புதிய பெயரையும் ரசிகர்கள் மத்தியில் கமல் அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் எதிர்ப்பு காரணமாக தனது சண்டியர் படத்தின் பெயரை கைவிடுவதாக அறிவித்த கமல், பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் படத்தை எடுத்து வருகிறார்.

கிட்டத்தட்ட 90 சதவீத வேலைகள் முடிந்து விட்ட நிலையில் ஆடியோ கேசட் வெளியீட்டை சென்னையில் வரும் 5ம் தேதி நடத்தவுள்ளார். இளையராஜாவின் இசையில் அட்டகாசமான பாடல்கள் வந்துள்ளதாக கமல் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

இந்த விழாவிலேயே தனது படத்தின் புதிய பெயரையும் கமல் அறிவிக்கலாம் என்கிறார்கள். சண்டியர் உள்பட மொத்தம் 5 பெயர்களை கமல்ஹாசன் தேர்வு செய்துள்ளதாகவும் அதில் ஒரு பெயரில் சாமி என்ற வார்த்தையும் இருப்பதாகவும் (கிருஷ்ணசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்க) சொல்கிறார்கள்.

சண்டியரை எதிர்த்தவர்களுக்கு மிரட்டல் தரும் வகையில் தமிழகம் முழுவதிலுமிருந்து தனது ரசிகர்களைத் திரட்டி மிகப் பெரும் விழாவாக நடத்த கமல் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இளையராஜாவின் இன்னிசையில் உருவாகியுள்ள பாடல்கள் அடங்கிய ஆடியோ கேசட்டுகளை கமலின் ராஜ்கமல் நிறுவனமே வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். விழா நடக்கும் இடத்திலேயே ஆடியோ கேசட் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil