»   »  விருமாண்டிக்கு மீண்டும் சிக்கல்

விருமாண்டிக்கு மீண்டும் சிக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிசம்பர் 25, 2003

விருமாண்டிக்கு மீண்டும் சிக்கல்

விருமாண்டி படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் குறித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அது குறித்து மத்திய தகவல்-ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேச கமல்ஹாசன் டெல்லி விரைந்துள்ளார்.

பலவித இடையூறுகளுக்குப் பின் உருவாகியுள்ளது முன்னாள் சண்டியரான, விருமாண்டி. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்துக்கு எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகள் படு வேகத்தில் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தில் டிஜிட்டல் கலர் கரெக்ஷன் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார் கமல். இந்திய சினிமாவில் இந்த நவீன முறை பயன்படுத்தப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். இதன்மூலம் காட்சிகள் மிக உக்கிரப்படுத்திக் காட்டப்பட்டுள்ளனவாம்.

இந்தத் தொழில்நுட்பத்துக்கு சென்சார் போர்டிடம் இருந்து எதிர்ப்பு வரலாம் என்று கமலுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்சார் போர்டை கையில் வைத்துள்ள மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சரைப் பார்த்துப் பேசிவிட்டு படத்தை தணிக்கைக்கு அனுப்ப கமல் திட்டமிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழக பிலிம் சேம்பரின் செயலாளர் சுரேசுடன் கமல் டெல்லி விரைந்துள்ளார்.

மேடையில் கமல் டான்ஸ்:

இந் நிலையில் வரும் ஜனவரி 26ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மேடையில் தோன்றி நடனமாடவுள்ளார்.

தமிழக சினிமா நடனக் கலைஞர்கள் கின்னஸ் சாதனை முயற்சியாக தொடர் நடனத்தில் ஈடுபடவுள்ளனர். ஒரே நேரத்தில் 450க்கும் மேற்பட்டவர்கள் மேடையில் ஆட உள்ளனர்.

இந் நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் ஆடுவார் என நடன இயக்குனர் ரகுராம் (நடிகை காயத்ரி ரகுராமின் தந்தை) தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil