»   »  பாட்டை திருடி விட்டார் கமல்: மதுரை கவிஞர் பரபரப்பு புகார்!

பாட்டை திருடி விட்டார் கமல்: மதுரை கவிஞர் பரபரப்பு புகார்!

Subscribe to Oneindia Tamil

விருமாண்டி படத்தில் வரும் கருமாத்துக் காட்டுக்குள்ளே என்ற வில்லுப் பாட்டு நான் எழுதியது, அதை கவிஞர்முத்துலிங்கம் எழுதியதாக விருமாண்டி பாடல் கேசட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மதுரை திருமங்கலத்தைச்சேர்ந்த கவிஞர் கண்ணன் என்பவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

சண்டியர் என்ற பெயரில் தொடங்கி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து விருமாண்டி என்ற பெயரில் உருவாகியுள்ளகமல்ஹாசனின் புதிய படத்தின் பாடல் கேசட் சமீபத்தில் சென்னையில் பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

படத்தின் பாடல்கள் அனைத்தும் படு ஹிட் ஆகியுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள கருமாத்தூர்காட்டுக்குள்ளே என்ற பாடலை தான் எழுதியதாகவும், ஆனால் கவிஞர் முத்துலிங்கத்தின் பெயரில் அதுவெளியாகியுள்ளதாகவும் திருமங்கலத்தைச் சேர்ந்த கவிஞர் கண்ணன் என்பவர் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து கண்ணனே கூறுகிறார்: கடந்த 1998ம் ஆண்டு, கருமாத்தூர் முனுசாமி வரலாற்றை வில்லுப்பாட்டுவடிவத்தில் உருவாக்கி, முத்துலட்சுமி என்பவரை வைத்துப் பாட வைத்து கேசட்டாக வெளியிட்டேன். சுமார் ஒருமணி நேரத்திற்கு இந்தப் பாட்டு வரும்.

ஆனால் கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் இந்தப் பாடலை அப்படியே எடுத்துக் கொண்டு 13 நிமிட பாடலாகமாற்றியுள்ளனர். இந்தப் பாடலை எழுதியவராக கவிஞர் முத்துலிங்கத்தின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அந்தப் பாடல் என்னுடையது, எனவே எனதுபெயரைத்தான் போட வேண்டும் என்று கோரினேன். ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

எனது பெயரை கேசட்டில் போட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பாடலை கேசட்டிலிருந்தும், படத்திலிருந்தும்நீக்க வேண்டும். இது தொடர்பாக எனது வழக்கறிஞர் மூலம் நடிகர் கமல்ஹாசன், ராஜ்கமல் நிறுவனத்தினர், கவிஞர்முத்துலிங்கம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். எனக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால், நஷ்ட ஈடுகோரி கமல்ஹாசன் மீது தனியாக வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளேன் என்றார் கண்ணன்.

சர்ச்சையே, உனது பெயர்தான் கமல்ஹாசனா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil