»   »  விருமாண்டி ரிலீஸ்: அமெரிக்காவில் கமல்

விருமாண்டி ரிலீஸ்: அமெரிக்காவில் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருமாண்டி படத்தை அமெரிக்காவில் திரையிடுவதற்காக, கமல் அங்கு சென்றுள்ளார்.

கமல் தனது சொந்த பேனரான ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, இயக்கி, நடித்த விருமாண்டி படம்பொங்கலன்று திரைக்கு வந்தது.

திரையுலக பிரமுகர்களுக்காக, கமல் இப் படத்தின் பிரிமியர் ஷோவை சென்னை சத்யம் தியேட்டரில் நடத்தினார்.

இந் நிலையில், படத்தை ஹாலிவுட்டில் திரையிடுவதற்காக கமல் அமெரிக்கா சென்றார். அங்கு நியூஜெர்சி,வாஷிங்டன், நியூயார்க், மாசாசூசெட்ஸ், லாஸ்ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் விருமாண்டி திரையிடப்படுகிறது.

பின்னர் கமல், ஹாலந்து நாட்டில் உள்ள ரோடர்டாம் நகரில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் கலந்துகொள்கிறார்.

அந்தத் திரைப்பட விழாவிலும் விருமாண்டி படம் திரையிடப்படவிருக்கிறது.

25 நாட்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, கமல் அடுத்தமாதம் 15ம் தேதி தான் சென்னைதிரும்புவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil