தொடர்ந்து 2 நாட்களாக டிரெண்டிங்கில் KamalHaasan...உலக நாயகன், உலகநாயகன் தான்
சென்னை : நேற்று ரிலீசான கமலின் விக்ரம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்த்து விட்டு அனைவரும் ஆஹா...ஓஹோ என பாராட்டி வருகின்றனர். நெட்டிசன்களும் விக்ரம் படத்தை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.

பொதுவாக ஒரு நடிகரின் படம் ரிலீசாகிறது என்றால் அந்த படத்தின் ரிலீசிற்கு முன்போ அல்லது முக்கிய அப்டேட் வெளியாகும் போதோ தான் அது தொடர்பான ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் ஆக்குவார்கள். ஆனால் விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்ததில் இருந்தே #Vikram ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் படம் முதல் நாளில் 30 கோடிகளை வசூல் செய்துள்ளது. தமிழில் முதல் நாளில் அதிக தொகையை வசூல் செய்த டாப் 5 படங்களில் விக்ரம் படமும் இடம்பிடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், ரஜினி என்ற மேஜிக்கை கடந்து, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி கமலின் விக்ரம் படம் வெற்றி பெற்றுள்ளது. எத்தனை ஆண்டுகள் நடிக்காவிட்டாலும் கமல் மீதான எதிர்பார்ப்பு, அவரின் படங்கள் மீதான ஆர்வம் கொஞ்சமும் குறையாமல் உள்ளது.
விக்ரம் படத்தின் ரிலீசை முன்னிட்டு நேற்று முன்தினம் துவங்கி தற்போது வரை ட்விட்டரில் #KamalHaasan ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெங்கில் இருந்து வருகிறது. இதில் விக்ரம் படம் பற்றிய தகவல்களையும், விமர்சனங்களையும் தொடர்ந்து ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். விக்ரம் படத்திற்காக கமல் செய்த ப்ரொமோஷன் வீடியோக்களும், விக்ரம் முதல் நாள் கலெக்ஷன் தொடர்பான தகவல்கள், முந்தைய படங்களின் வசூலுடனான ஒப்பீடுகள் என விக்ரமை வேற லெவலில் கொண்டாடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











