அனிருத்தை அழ வைத்த கமல்...அப்படி என்ன செய்தார்?
சென்னை : விக்ரம் படத்தின் போது கமல் தன்னை அழ வைத்து விட்டதாக இசையமைப்பாளர் அனிருத் கூறினார். கமல் அப்படி என்ன செய்தார், எதற்காக அனிருத் அழுதார் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்தியாவிலேயே ஓப்பனிங் நாளில் அதிகம் வசூல் செய்யும் படமாக விக்ரம் படம் இருக்கும் என உலகமே இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா போன்றோர் நடித்திருக்கிறார்கள் என்ற தகவல் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. சூர்யா ரசிகர்கள் இதை சூர்யா படமாகவே நினைத்து கொண்டாடி வருகின்றனர். நான் ஆண்டுகளுக்கு பிறகு கமலின் வெறித்தனமான ஆக்ஷனை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

விக்ரம் படம் நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ளது. தெலுங்கு வெர்சனுக்கான ப்ரொமோஷன் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் அனிருத்தை அனைவரும் பெரிதாக பாராட்டினர். நிகழ்ச்சியில் பேசிய அனிருத், நான் இதுவரை எதற்கும் எமோஷனல் ஆனது கிடையாது. ஆனால் விக்ரம் படத்தில் கமலின் அசத்தலான நடிப்பை பார்த்து நான் அழுது விட்டேன். இதை லோகேஷ் கனகராஜிடமும் நான் பகிர்ந்து கொண்டேன் என்றார்.
வெகு காலமாக தாமதமாகி வரும் கமலின் இந்தியன் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அந்த படங்கள் தாமதமாகி வருகின்றன. இதனால் கமலுக்காக அனிருத் இசையமைத்துள்ள முதல் படம் விக்ரம் தான். இதுவரை வெளியான பாடல்களில் அனிருத்தின் இசை ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் பேக்கிரவுண்ட் மியூசிக் எப்படி இருக்கும் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











