இதை மட்டும் விடாமல் செய்யுங்க...லோகேஷுக்கு கமல் கொடுத்த புது அட்வைஸ்
சென்னை : விக்ரம் பட ரிலீசுக்கு பிறகு இந்த படத்தில் நடித்தவர்கள், பணியாற்றியவர்கள் ஒவ்வொருவராக உணர்ச்சி வசப்பட்டு, தங்களின் உணர்வுகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கமலும் பதிலளித்து வருகிறார்.
விக்ரம் டீமின் இந்த சுவாரஸ்யமான உரையாடல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்த ட்வீட்களை ரசிகர்களும் டிரெண்டாக்கி வருகின்றனர். இதன் காரணமாகவே ட்விட்டரில் #Vikram, #KamalHaasan போன்ற ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளன.

எமோஷனலான சூர்யா
விக்ரம் படஇசையமைப்பாளர் அனிருத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யாவும், விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றியது கனவு நனவான தருணம். எப்படி சொல்வதென்றே தெரியல. இந்த வாய்ப்பை கொடுத்த கோலேஷிற்கு நன்றி என ட்வீட் செய்திருந்தார். கமலை அண்ணா என குறிப்பிட்டு சூர்யா போட்ட ட்வீட்டிற்கு, தம்பி சார் என கலாய்த்து பதிலளித்த கமல், சூர்யா மீதான அன்பு முன்பை விட அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

இப்படி உணர்ச்சி வசப்பட்டதில்லை
இந்த சமயத்தில் படத்தின் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது உணர்வை ட்வீட் செய்திருந்தார். அதில், இதுவரை இப்படி உணர்ச்சி வசப்பட்டதேயில்லை. நீங்கள் என்னையும் விக்ரம் படத்தையும் ஏற்றுக் கொண்டது என்னை உணர்ச்சி வசப்பட வைத்து விட்டது. இந்த அன்பை எப்படி திருப்பிக் காட்ட போகிறேன் என்றே தெரியவில்லை. உங்களின் அன்பிற்கும் கமல்ஹாசன் சாருக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன். அனைவரின் அன்பிற்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

இதை மட்டும் செய்யுங்க
இதற்கு பதில் ட்வீட் போட்டுள்ள கமல்ஹாசன், ரசிகர்களின் அன்பு கடனை திருப்பிச் செலுத்த ஒரே வழி மனநிறைவு பெறாமல் இருப்பது தான். நேர்மையாக, உண்மையாக உழைத்தால் அதை மக்கள் மதிப்பார்கள். என்னுடைய ஆற்றல் அவர்களின் அன்பில் இருந்து கிடைத்தது தான். உங்கள் முயற்சிக்கு சக்தி அதிகம். இந்த முறை செய்ததை போல் வருங்காலத்திலும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் உங்களை ஆதரிக்கும் என்றார்.

நல்ல தரமான பதிவு
இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் ஆர்வமாக, சட்டுபுட்டுன்னு தளபதி 67 அறிவிப்பை வெளியிடுங்க ஆண்டவரே. தரமான சம்பவம் தளபதி 67 க்கு வேணும்னா கொஞ்சம் பொறுமையா தான் இருக்கணும் போல. கமல் சார், இது மாதிரி ஒரு விமர்சனத்தை எந்த படத்திற்கும் கேட்கவில்லை இதுவரை. தன்னை ரசிச்ச, தன்னை நம்பி வந்த புள்ளை சோடை போக கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக ஒத்த ஆளா சுத்தி சுத்தி உலகம் முழுவதும் பெத்த புள்ளைய பெரியாளாக்க பாடுபடும் தகப்பன போல பார்றா எம்புள்ளையன்னு எல்லாருக்கும் கொண்டு போயிருக்கீங்க கமல் சார். நல்ல தரமான பதிவு என நெட்டிசன்கள் கமலை புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











