ஆட்டம் ஆரம்பமாகிடுச்சு...200 கோடி கிளப்பில் இணைந்தது கமலின் விக்ரம்

சென்னை : லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான விக்ரம் படம் உலக அளவில் 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இதனை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாட துவங்கி விட்டனர்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா ஆகியோர் நடித்த விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் ஜுன் 3 ம் தேதி தியேட்டர்களில் 5 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது.

ரசிகர்கள் கொண்டாடும் விக்ரம்

ரசிகர்கள் கொண்டாடும் விக்ரம்

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து தரப்பிலும் பாசிடிவ் விமர்சனங்களையே விக்ரம் பெற்றது. பலரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். விக்ரம் படம் பான் வேர்ல்டு என்பதை தாண்டி பான் ஸ்பேஸ் படம் என்று கூட ரசிகர்கள் புகழ்ந்தனர். முதல் நாளில் 30 கோடிகளை மட்டுமே விக்ரம் வசூல் செய்ததால் சிலர் கிண்டலாக அதை கூறி வந்தனர்.

2 நாளில் 100 கோடி வசூல்

2 நாளில் 100 கோடி வசூல்

ஆனால் அதைத் தொடர்ந்து வந்த வார இறுதி நாட்களில் விக்ரம் படத்தின் வசூல் இரு மடங்காக அதிகரித்தது. இரண்டாவது நாளிலேயே உலக அளவில் 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டது விக்ரம். மூன்றாவது நாளில் இந்தியாவில் 100 கோடி வசூலை கடந்தது. இரண்டாவது நாளே பீஸ்ட், வலிமை படங்களின் வசூல் சாதனையை விக்ரம் முறியடித்து விட்டது.

200 கோடி கிளப்பில் விக்ரம்

200 கோடி கிளப்பில் விக்ரம்

2022 ல் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்த விக்ரம் ரிலீசான 5 நாட்களில் உலக அளவில் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இது படத்திற்கு மிகப் பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதனால் மிக விரைவிலேயே உலக அளவில் 500 கோடி வசூல் கிளப்பில் விக்ரம் படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேறலெவல் ஆட்டமா இருக்கே

வேறலெவல் ஆட்டமா இருக்கே

சினிமா வர்த்தகர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, விக்ரம் படம் உலக அளவில் 200 கோடி வசூலை கடந்து விட்டது. அமெரிக்காவில் மட்டும் 2 மில்லியன் டாலர் (15.5 கோடி) வசூல் செய்துள்ளது. ஐந்தாவது நாளான நேற்று, உலகம் முழுவதும் 22 முதல் 25 கோடியை விக்ரம் படம் வசூல் செய்துள்ளது. மொத்தமாக தற்போது வரை 215.65 முதல் 218.65 கோடிகளை விக்ரம் படம் வசூல் செய்துள்ளது.

எங்கு எவ்வளவு வசூல்

எங்கு எவ்வளவு வசூல்

தமிழகத்தில் 73.6 கோடி, ஆந்திராவில் 14.5 கோடி, கர்நாடகாவில் 13.3 கோடி, கேரளாவில் 17.77 கோடி, இந்தியில் 3 கோடி, வெளிநாடுகளில் 71.5 கோடிகள் வசூலை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 122.17 கோடிகளை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் தமிழகத்திலும் 100 கோடி வசூலை விக்ரம் படம் பெறும் என வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X