நாயகன் மீண்டும் வர்றார்... அட்டகாசமான டைட்டில் டிராக்...கமலுக்காகவே எழுதிருக்காங்களே
சென்னை : விக்ரம் படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில் விக்ரம் படத்தின் டைட்டில் டிராக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கமலுக்காக இந்த பாடலின் வரிகளை எழுதி இருக்கிறார்கள். இந்த பாடலை அதிகமானவர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் நாளை ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் விக்ரம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது.

ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கும் கமல்
அனைவரும் ஆவலுடன் விக்ரம் படத்தின் ரிலீசை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கையில், முதல் முறையாக ரசிகர்களுடன் சேர்ந்து விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை கமலும் பார்க்க போகிறார். அதுவும் சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் பார்க்க போகிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிக உற்சாகமடைய வைத்துள்ளது.

இப்படி ஒரு ப்ரொமோஷனா
விக்ரம் படத்திற்காக சர்வதேச அளவில் ப்ரொமோஷன் செய்து வருகிறார் கமல். சமீபத்தின் ஃபிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் டிரைலர் திரையிடப்பட்ட நிலையில், நேற்று உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் விக்ரம் படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது. இதை கமல், சேரில் ஸ்டெயிலாக அமர்ந்து பார்த்த போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி செம டிரெண்டாகி வருகின்றன.

டைட்டில் டிராக் வெளியீடு
விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக குத்தாட்டம் போட வைத்த பத்தல பத்தல பாடல், செகண்ட் சிங்கிளாக சென்டிமென்டான போர் கண்ட சிங்கம் ஆகிய பாடல்களை தொடர்ந்து சமீபத்தில் வேஸ்டட் என்ற பாடல் மூன்றாவது சிங்கிளாக வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் எதிர்பார்ப்பை கூட்டுவதற்காக இன்று விக்ரம் படத்தின் டைட்டில் டிராக் லிரிக்கல் சாங் வெளியிடப்பட்டுள்ளது.

நாயகன் மீண்டும் வர்றார்
நாயகன் மீண்டும் வர்றார் என துவங்கும் இந்த பாடல் முழுக்க முழுக்க கமலுக்காக எழுதப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடிக்கும் படம் என்பதால் மாஸ் காட்டுவதற்காக பல வரிகள் கமலை போற்றி, கொண்டாடுவதற்காக எழுதப்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் விஜய் டிவியில் ஜுனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பாடலாசிரியர் விஷ்ணுவே கூறி இருந்தார்.

கமலுக்காகவே எழுதிருக்காங்களே
இவன் வரலாறை ஒரு யுகம் பாடும்...இவனின் கலை தாகம் ஒரு விலையாகும்...இவன் அடையாளம் அது கடலாகும்...பல போர் வென்ற பெயராகும் என்ற வரிகள் முழுக்க முழுக்க கமலுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகின்றனர். இந்த பாடல் வெளியிடப்பட்ட 30 நிமிடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











