கமலஹாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி...ஏன், என்னாச்சு ஆண்டவருக்கு?

சென்னை : நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமலஹாசன் இன்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏன் அவரது உடல்நிலைக்கு என்ன ஆச்சு என ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

கமலஹாசன் தற்போது சினிமா, டிவி ஷோ, அரசியல் என படுபிசியாக இருந்து வருகிறார். நேற்று பிக்பாஸ் சீசன் 5 ஃபினாலே நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டார். கிட்டதட்ட 5 மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஆனால் இந்த முறை நேரடி ஒளிபரப்பாக இல்லாமல், ரெக்கார்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கமல் மருத்துவமனையில் அனுமதி

கமல் மருத்துவமனையில் அனுமதி

4 நாட்களுக்கு முன்பே பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சிக்கான ஷுட்டிங் முடிந்து விட்டது. அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான ப்ரோமோவிற்கான ஷுட்டிங்கிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இன்று திடீரென கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏன், என்னாச்சு ஆண்டவருக்கு

ஏன், என்னாச்சு ஆண்டவருக்கு

லேட்டஸ்ட் தகவலின்படி, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை - போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் கமல். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ஒரு மாத காலம் நிறைவடைவதாலும், அடுத்தடுத்து பல ஷுட்டிங்கில் கலந்து கொண்டு வருவதாலும் அவர் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தான் விஷயமா

இது தான் விஷயமா

முழு உடல் பரிசோதனை செய்து கொண்ட பிறகு இன்று அல்லது நாளைக்கு கமலஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் கமல் இன்று கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கமல் பயங்கர பிஸி

கமல் பயங்கர பிஸி

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல், சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க போகிறார். அதோடு ஓடிடி வெர்சனாக துவங்கப்பட உள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க போகிறார். 24 மணி நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ள இந்த நிகழ்ச்சி என்பதால், இதில் தினமும் கமல் வருவாரா அல்லது வார இறுதி நாட்களில் மட்டும் வருவாரா என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X