»   »  காமராஜர் பிறந்த நாள் விழா... நடிகர் ஜீவா நடத்தும் ரத்ததான முகாம்!

காமராஜர் பிறந்த நாள் விழா... நடிகர் ஜீவா நடத்தும் ரத்ததான முகாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காமராஜர் பிறந்த நாளையொட்டி நடிகர் ஜீவா தி.நகரில் ரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

காமராஜரின் 115வது பிறந்த நாள் ஜூலை 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்ந்து மறைந்து, நினைவிடமாக மாற்றப்பட்டுள்ள தி.நகர் காமராஜர் இல்லம் அருகே இந்த ரத்த தான முகாம் நடைபெற உள்ளது.

Kamaraj Birthday Blood Donation Camp

ரத்த தானம் கொடுக்க விரும்புவர்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பங்கேற்கலாம். இது குறித்து நடிகர் ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.

காமராஜரின் மிகப்பெரும் அபிமானியான ஜீவா, ரஜினியின் தீவிர ரசிகரும் ஆவார். தமிழகத்தில் ரஜினியால் மட்டுமே காமராஜரின் ஆட்சியை மீண்டும் அமைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர். ரஜினி ரசிகர் மன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளும் ஜீவா, தனியாகவும் சமூகப் பணிகள் ஆற்றி வருகிறார்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாமுக்கு ஜீவா ஏற்பாடு செய்துள்ளார்.

English summary
Actor Jeeva is coordinating Blood Donation Camp in T Nagar near Kamarajar Memorial House, as pat of Kamarajar;s 115th birthday celebrations.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil