»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கனகாவின் நிலை ரொம்பவே பரிதாபமாக இருக்கிறதாம்.

முதல் படமே தூக்கோ தூக்கு என்று தூக்கியதால், வெகு சீக்கிரமாக சினிமாவின் உச்சாணிக் கொம்புகளில் ஏறியநடிகைகளில் கனகாவும் ஒருவர். தமிழ் சினிமா வரலாற்றின் மாபெரும் வெற்றிப் படங்களில் கரகாட்டக்காரன்படமும் ஒன்று.

அந்தப் படத்தில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்திக்,சரத்குமார் என எல்லோருடனும் ஒரு ரவுண்டு வந்தவர் கனகா.

இவரது அம்மா தேவிகா அளவுக்கு பெயர் பெறாவிட்டாலும், தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக சிறிதுகாலம் இருந்தவர் கனகா.

முன்னணியில் இருந்த கனகாவுக்குப் போகப் போக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டன. மும்பை வரவுகளின்படையெடுப்பால் கனகா ஓரம்கட்டப்பட்டார். வீட்டில் பொழுது போகாததால், லிவிங்ஸ்டன் போன்ற 3ம் வரிசைநடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்.

பின்பு அந்த வாய்ப்புகளும் குறைந்தபோது, விவேக் உடன் ஜோடி சேரும் நிலைக்கு கீழிறங்கி வந்தார். ஒருகட்டத்தில் அந்த வாய்ப்புகளும் குறைந்துபோனது. இதனால் வீட்டில் சும்மாவே இருந்தார்.

இந் நிலையில்தான் அவரது அம்மா தேவிகா திடீர் மரணமடைந்தார். அவரது மரணம் கனகாவை பெரிதும் பாதித்துவிட்டது. ஒரே துணையாக இருந்த வந்த அம்மாவை இழந்ததால் பெரும் விரக்திக்குள்ளான கனகா, மனஅழுத்தத்திற்கு ஆளாகி மனநலம் பாதிக்கப்பட்டார்.

அவரது உறவினர்கள், நண்பர்களின் உதவியோடு சிகிச்சை எடுத்து வந்த கனகா இப்போது நலமடைந்து உள்ளார்.ஆனால் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்ற கவலை அவரை இப்போது ஆட்டிப்படைக்கிறது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் இப்போது அவர் வசித்து வருகிறார்.சினிமாவில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லாததால் அதற்கு முழுக்குப் போட்டு விட அவர் முடிவு செய்துள்ளாராம்.

Read more about: chennai, cine field, cinema, deviga, kanaga, news

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil