»   »  படம் 'பாஸ்'னா.. வசூல் 'மாஸ்'.. 2015ன் முதல் 100 கோடிப் படமாக உயர்ந்த காஞ்சனா 2!

படம் 'பாஸ்'னா.. வசூல் 'மாஸ்'.. 2015ன் முதல் 100 கோடிப் படமாக உயர்ந்த காஞ்சனா 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "கோலிவுட்டில் இது பேய் மழைக் காலம்"... பேய்ப் படம் எடுத்து பல கோடி வசூல் பார்த்து விடலாம் இக்காலத்தில். ஹீரோக்களையும், ஹீரோயின்களையும் நம்புவதை விட பேய்களை நம்பினால் பெரு வாழ்வு வாழலாம்... காஞ்சனா 2 அதற்கு சரியான உதாரணம்.

ஒரு பேயை வைத்து 3 படம் எடுத்து சூப்பராக செட்டிலாகி விட்டார் ராகவா லாரன்ஸ். அதிலும் கடைசியாக அவர் கொடுத்த காஞ்சனா 2 செம வசூலை வாரிக் குவித்து லாரன்ஸ் வாழ்க்கையில் மட்டும்ல்ல, தமிழ் சினிமாலும் புதிய டிரெண்டை ஏற்படுத்தி விட்டது.


2015ம் ஆண்டில் ரூ. 100 கோடி வசூலைத் தொட்ட + தாண்டிய முதல் படம் என்ற பெயரை காஞ்சனா 2 தட்டிச் சென்றுள்ளது.


அதே கதை.. வேற வேற பேய்

அதே கதை.. வேற வேற பேய்

முனி என்று முதலில் எடுத்தார். ராஜ்கிரணின் மிரட்டல் நடிப்பால் படம் பட்டையைக் கிளப்பியது. வசூலிலும் அள்ளி அப்பியது. முனி சூப்பர் ஹிட் ஆனதால் அதன் 2ம் பாகத்திற்குச் சென்றார் லாரன்ஸ்.


காஞ்சனா

காஞ்சனா

2ம் பாகத்திற்கு காஞ்சனா என்று பெயர் வைத்தார். முனியில் ஒரு பேய் என்றால் காஞ்சனாவில் நிறைய பேய். அதில் முக்கியமானது சரத்குமார் பேய். அரவாணி வேடத்தில் வந்து அசத்தியிருந்தார் சரத்குமார். இதுவும் பேய் ஹிட்டடித்தது.


காஞ்சனா 2

காஞ்சனா 2

அடுத்து காஞ்சனாவின் 2ம் பாகம். இதிலும் பேயை வைத்து விளையாடியிருந்தார் லாரன்ஸ். இந்தப் படத்திலும் நிறையப் பேய். நித்யா மேனன், டாப்சி என இரு ஹீரோயின்கள். படம் சூப்பர் ஹிட்.


வசூல் மழை

வசூல் மழை

முதல் இரு படங்களை விட காஞ்சனா 2 படத்துக்கு பெரும் வரவேற்பு. பேய்க் கதை, காமெடி, அடிதடி, ஆக்ஷன் என அத்தனை பிளாக்குகளையும் ஒட்டுக்காக போட்டு தூள் கிளப்பியதால் அனைத்துத் தரப்பிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு.. வசூலும் வாரிக் குவிந்தது.


சின்னக் கல்லு பெத்த லாபம்

சின்னக் கல்லு பெத்த லாபம்

சின்னக் கல்லு பெத்த லாபம் என்ற பஞ்சதந்திரம் பட வசனத்துக்கேற்ப, சிறிய பட்ஜெட்டில் (ரூ. 17 கோடி) உருவான இப்படம் இன்று ரூ. 108 கோடியை வாரிக் குவித்துள்ளது. அத்தனை பேரும் அசந்து போய் நிற்கின்றனர். இந்த வசூல் உலகம் முழுவதும் கிடைத்ததாகும்.


50 நாட்களைத் தாண்டி அதிரிபுதிரியாக

50 நாட்களைத் தாண்டி அதிரிபுதிரியாக

50 நாட்களைத் தாண்டி தொடர்ந்து அதிரிபுதிரியாக, பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சியாக காஞ்சனா 2 ஓடி வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.


முதல் படம்

முதல் படம்

இந்த ஆண்டில் ரூ. 100 கோடி வசூலைத் தொட்ட முதல் தமிழ்ப் படம் இதுதான் என்று சொல்கிறார் திரைப்பட வர்த்தக ஆய்வாளர் திரிநாத். உலகம் முழுவதும் ரூ. 108 கோடியை வசூலித்து பேய்ப் படங்களில் புதிய சாதனை படைத்துள்ளது காஞ்சனா 2 என்கிறார் திரிநாத்.


அடுத்த பேய் ரெடியாகுது

அடுத்த பேய் ரெடியாகுது

காஞ்சனா 2 ஹிட்டைத் தொடர்ந்து காஞ்சனா 3 படத்தின் கதையை ரெடி செய்து வருகிறாராம் லாரன்ஸ். விரைவில் இப்படத்தை அவர் தொடங்கவுள்ளார்.


English summary
Kanchana 2 is still running packed houses in many theatres in TN and has collected Rs 108 cr so far. It has also become the first Tamil bloackbuster which collected Rs 100 cr in 2015.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil