»   »  காஞ்சனா 2 : முதல்பாதி மிரட்டல்… இரண்டாம் பாதி விரட்டல்… ட்விட்டர் விமர்சனம்

காஞ்சனா 2 : முதல்பாதி மிரட்டல்… இரண்டாம் பாதி விரட்டல்… ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முனி, காஞ்சனா போன்ற காமெடி பேய் படங்களை கொடுத்த ராகவா லாரன்சின் 3 வது படம் காஞ்சனா 2 ( முனி 3). படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே லைவ் ஆக விமர்சனம் எழுதுபவர்கள் நம்ம ஆட்கள்.

இப்போதெல்லாம் ட்விட்டரில் சூடாக சுவையாக கமெண்ட் போஸ்ட் செய்து கொண்டே இருக்கின்றனர். இதைப்பார்த்தே ‘கெத்து' படமா? அல்லது ‘மொக்கை' படமா என்று ஒரளவிற்கு முடிவிற்கு வந்து விடலாம்.

காஞ்சனா 2 படத்தின் புரமோசனை சன்டிவியில் பார்த்தே குட்டீஸ்கள் வீடுகளில் தொல்லை தர ஆரம்பித்து விட்டனர். அதுவும் தேர்வு விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் செய்துள்ள ராகவா லாரன்ஸ் ஓரளவு வெற்றி பெற்று விட்டார் என்றே கூறலாம். ஆனாலும் இளசுகள் ட்விட்டரில் குவித்துள்ள விமர்சனங்களையும் கொஞ்சம் படிக்கலாமே.

கல்லா கட்டும்பா

Iyyanars* ‏@iyyanars - ராகவா லாரன்சுக்கு லைஃப் லாங் பிரச்சினையே இல்ல!..'காஞ்சனா'...எத்தனை பார்ட் எடுத்தாலும் 'கல்லா'கட்டலாம்! ;)

மிரட்டல் - விரட்டல்

காஞ்சனா 2 முதல் பாதி மிரட்டலாகவும் இரண்டாம் பாதி தியேட்டரை விட்டு விரட்டலாகவும் அமைந்தது. #ஒரு தபா பாக்கலாம் என்று ட்விட்டியுள்ளார் மனோ மதுரை. அதேபோல தனிமையின் தோழன் என்பவர் ராகவா லாரன்சின் நடிப்பின் உச்சம் #காஞ்சனா2 என்று குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை பேய்கள்?

எத்தனா பேய்கள்ளடா... தெளிவா சொல்லுங்க டா!! #அடேய்ய்ய்-ரிவ்யூவர்ஸ் #காஞ்சனா2 என்று ஒருவர் குழம்பியுள்ளார்.

---

பதினொரு பேரு கொண்ட ஒரு கிரிக்கெட் டீமே ஒரு மனுஷன் ஒடம்புக்குள்ள இருக்காமே #காஞ்சனா2

பேய்க்கும் பேய்க்கும் சண்டை அத இந்த ஊரே வேடிக்கை பார்க்குது

நீ சாதா பேய் நான் சாமிப்பேய் #முனி3 #காஞ்சனா2 என்று பட வசனத்தை ஓருவர் ட்விட்டியுள்ளார்.

முனி 4 வருதாதே

முனி 2 மாதிரி எடுங்கயான்னா, முனி 1 மாதிரி எடுத்துருக்கானுங்க. . .இதுல முனி 4 வேற வருதாம்,உஸ்ஸ் #காஞ்சனா2 என்று நோபிட்டா என்பவர் ட்விட்டியுள்ளார். நீ மாஸ்னா, நான் பக்கா மாஸ் #காஞ்சனா2 பேய் புகுந்தாலும் பன்ச் டயலாக் போகாது போல... என்று அவதார் என்பவர் ட்விட்டியுள்ளார்.

கோவை சரளா

#காஞ்சனா2 ரசித்த வசனங்கள்

கோவை சரளா : இது என்டர்டெய்ன்மென்ட் பேய் நம்மல அடிக்காது என்று அன்பே சிவம் பாலா என்பவர் பதிவிட்டுள்ளார்.

குழந்தைகளை கவரும்

#காஞ்சனா- 2 ஃபேமிலி ஆடியன்ஸ (மெயின்லி குழந்தைகள்) கவர, எடுத்த படம். ஆனா... சரி விடுங்க நமக்கெதுக்கு வம்பு என்று கார்த்திக் ராஜசேகர் என்பவரின் கருத்து

ஓகே கிடைக்கலயா? காஞ்சனா 2 ஓகே...

ஓகே கிடைக்கலயா? காஞ்சனா 2 ஓகே...

நம்மாளுங்க ரசனையெல்லாம் ஓகே கண்மணி டிக்கெட் கிடைக்கலேன்னா காஞ்சனா-2 போவாங்க அவ்ளோதான் என்று காக்கைச் சித்தர் என்பவர் ட்விட்டியுள்ளார்.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

மொத்தத்தில் காஞ்சனா 2 படத்திற்கு ஒரு கலவையான விமர்சனமே அளித்துள்ளனர் ட்விட்டர்வாசிகள். ஆனாலும் என்ன குட்டீஸ்களின் கூட்டம் தியேட்டரில் அள்ளுகிறதாமே?

English summary
Raghava Lawrence starrer "Kanchana 2" has opened to positive reviews from audience and critics. The Tamil movie is directed by the actor himself and produced by Bellamkonda Suresh.
Please Wait while comments are loading...